• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"16 வயதினிலே".. அவரேதான்.. பத்மா லட்சுமி யார்னு தெரியுதா.. திடீர்னு லைம்லைட்டில் வந்து.. செம மெசேஜ்

Google Oneindia Tamil News

மும்பை: "முஸ்லீம் எதிர்ப்பு வாசகங்கள் அச்சத்தை உருவாக்குகிறது. மக்களின் மனதை விஷமாக்குகிறது. இந்த பிரச்சாரம் ஆபத்தானது, மோசமானது. உங்களை விட ஒருவர் குறைவானவர் என்று நீங்கள் கருதினால், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் நீங்களும் பங்கேற்கிறீர்கள் என்று அர்த்தம்" என்று பத்மா லட்சுமி பதிவிட்டுள்ளார்.

யார் இந்த பத்மா லட்சுமி?

யார் இந்த பத்மா லட்சுமி?

பத்மா பார்வதி லட்சுமி என்பது முழு பெயர்.. 52 வயதாகிறது.. இவர் ஒரு அமெரிக்க இந்திய நடிகை ஆவார். மாடல் அழகி.. இவர்

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவியும் ஆவார்.

கேரளாவில் பிறந்தவர்.. சென்னையில் வளர்ந்தவர்.. பிறகு கலிபோர்னியாவிலும் வாழ்ந்தவர்.. சமையல் கலையில் கைதேர்ந்தவர்.. அமெரிக்க டிவிகளில் இவர் நடத்திய அத்தனை ஷோக்களும் பிரபலமானவை.

 சல்மான் ருஷ்டி

சல்மான் ருஷ்டி

பிறகு, பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான தூதுவராக பொறுப்பேற்றவர்.. 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தந்த பேட்டி ஒன்று உலகம் முழுவதும் வைரலாக சென்றது.. இவர் 16 வயதாக இருந்தபோது, லாஸ்ஏஞ்சல்ஸில் இவரை 23 வயதுடைய நபர் பலாத்காரம் செய்துவிட்டாராம்.. அப்போது முதலே தனக்கு பாலியல் பாலியல் சீண்டல்கள் இருந்து வந்ததாகவும், தன்னுடைய 8 வயது மகளுக்கு "நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்" உள்ளிட்டவை குறித்து விளக்கி வருவதாக கூறியிருந்தார்.

 ஹனுமன் ஜெயந்தி

ஹனுமன் ஜெயந்தி

அதுமட்டுமல்ல, அதேபோல பெண்களும் தங்களுடைய கொடுமைகளை குறித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்... இப்போது மீண்டும் லைம்லைட்டில் வந்துள்ளார் பத்மா லட்சுமி.. டெல்லியின் ஜஹாங்கிர்புரி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது 2 சமூகத்தினரிடையே மோதல் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடைபெற்ற வன்முறை குறித்து தி கார்டியன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற சர்வதேச பத்திரிகைகளின் செய்திக் கட்டுரைகளை சுட்டிகாட்டி உள்ளார்.

 இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை கொண்டாடுவது கவலை அளிக்கிறது என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்துக்களே ஒன்று புரிந்துகொள்ளுங்கள். இந்துக்களுக்கு இந்தியாவிலோ அல்லது வேறு நாட்டிலோ அச்சுறுத்தல் இல்லை. உண்மையான ஆன்மீகம் எந்த வகையிலும் வெறுப்பை விதைப்பதற்கு இடமளிக்காது.

 எதிர்ப்பு வாசகம்

எதிர்ப்பு வாசகம்

இந்த பழமையான, பரந்த நிலத்தில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ வேண்டும். பரவலான முஸ்லீம் எதிர்ப்பு வாசகங்கள் அச்சத்தை உருவாக்குகிறது. மக்களின் மனதை விஷமாக்குகிறது. இந்த பிரச்சாரம் ஆபத்தானது, மோசமானது. உங்களை விட ஒருவர் குறைவானவர் என்று நீங்கள் கருதினால், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் நீங்களும் பங்கேற்கிறீர்கள் என்று அர்த்தம்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
who is this padma lakshmi and says sickening to see violence against muslims celebrated இஸ்லாமியர்கள் எதிர்ப்பு வாசகங்கள் அச்சத்தை தருவதாக பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X