"தங்கச்சி முறை".. ஒரு அண்ணன் வீடியோ எடுக்க.. இன்னொரு அண்ணன் சீரழிக்க.. கொடுமையை பாருங்க..!
மும்பை: அண்ணன் முறை என்றுகூட கரிசனம் இல்லாமல், இளம்பெண்ணை நாசம் செய்துள்ள கொடுமை நடந்துள்ளது.. மும்பையில்..!
மும்பை வில்லே பார்லே பகுதியில் வசித்து வருபவர்கள் அனில் சோகன்.. இவரது அண்ணன் நிலேஷ் சோகன்... இருவருமே தாராவி பகுதியில் வசித்து வந்தனர்.
4-வது ரெய்டு...2017 முதல் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை துரத்தும் சிபிஐ, ஐடி, அமலாக்கப் பிரிவு!
இதே பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. இவர்களுக்கு தங்கை முறை உறவாகிறது.. ஆனாலும் அண்ணன் - தங்கை போல இல்லாமல் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.

தங்கச்சி
வீட்டு விஷயங்கள் உட்பட நண்பர்கள் போலவே பல விஷயங்களையும் இவர்களுக்குள் பரிமாறி கொள்வார்களாம்.. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்தார்.. இது தெரிந்து கொண்ட சகோதரர்கள் 2 பேரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர்... வழக்கம்போல் இயல்பாக பேசி கொண்டிருந்த சகோதரர்கள் திடீரென கத்தியை எடுத்து அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்தனர்..

பலாத்காரம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அங்கிருந்து தப்ப முயன்றார்.. ஆனாலும், கத்தி முனையிலேயே அவரை மிரட்டி பலாத்காரம் செய்தனர்.. ஒருவர் பலாத்காரம் செய்ய, இன்னொருவர் அதை வீடியோவாக ரிக்கார்ட் செய்து கொண்டார்.. இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னாலோ, அல்லது போலீசுக்கு போனாலோ, ஆபாச வீடியோ சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.. இந்த மிரட்டலுக்கு பயந்து போன அந்த பெண்ணும் சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

தலைமறைவு
இந்த பயத்தை சகோதரர்கள் இருவருமே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.. எனவே, மறுபடியும் மறுபடியும் அந்த பெண்ணை நாசம் செய்ய ஆரம்பித்தனர்.. நாளுக்கு நாள் இவர்களின் தொல்லை அதிகரித்ததால் சம்பவம் குறித்து தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்... இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், போலீசாரிடம் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் சகோதரர்கள் 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்..

கைது
அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேட தொடங்கினர்.. எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் அவர்கள் இடத்தை கண்டறிய நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.. இதனால் பலரிடம் நேரடி விசாரணை நடத்தியதில், மும்பை வில்லே பார்லேவில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.. அங்கு சுற்றி வளைத்து 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.