• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இது" கூட தெரியாதா.. 30 வயசு பெண்ணா நீ.. பெட்ரூமில் கணவன் செய்த காரியம்.. போலீசுக்கே ஷாக் தான்..!

Google Oneindia Tamil News

மும்பை: மனைவிக்கு சேலை கட்ட தெரியாது என்பதற்காக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்னதான் நவநாகரீக உலகமாக மாறி கொண்டிருந்தாலும் சேலைக்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை.. அதேசமயம், இளம்பெண்கள் சேலைகளை அணிவதும் குறைந்து வருகிறது.

ரயில்வேயில் வேலை... 4 பேரிடம் ஆசைக்காட்டி சுமார் ரூ.60 லட்சம் அபேஸ் செய்தவர் கைது ரயில்வேயில் வேலை... 4 பேரிடம் ஆசைக்காட்டி சுமார் ரூ.60 லட்சம் அபேஸ் செய்தவர் கைது

ஜீன்ஸ், சுடிதார், லெகின்ஸ் என கேஷூவல் டிரஸ்ஸுக்கு மாறிவிட்டனர்.. இது நாகரீகம் என்றாலும் மற்றொரு பக்கம் பெண்களுக்கு பிடித்த மற்றும் வசதியான உடையாக இருக்கிறது.

 சேலை

சேலை

ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இன்னமும் சேலை கட்ட தெரியாமல் இருப்பது அதைவிட ஆச்சரியமாகவும் இருக்கிறது.. நமக்கு சேலை கட்ட தெரியவில்லையே என்ற கவலையும் வருத்தமும்கூட அவர்களுக்கு இருப்பதில்லை.. அதற்காக சிரமப்படுவதும் இல்லை.. எப்படி கட்ட வேண்டும் என்ற அக்கறையும் எடுத்து கொள்வதில்லை.. ஆனால், அவர்களின் கணவர்கள்தான் அவர்களுக்கும் சேர்த்து கவலைப்படுகிறார்கள்.

 ஜாலி கணவன்கள்

ஜாலி கணவன்கள்

பெரும்பாலான ஆண்களுக்கு சேலை மீது மதிப்பும், மரியாதையும் இருக்கவே செய்கிறது.. தன் மனைவி அப்படி சேலையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதை மறுக்க முடியாது.. சில சமயம் இதை கணவன்மார்கள் ஜாலியாக எடுத்து கொள்கிறார்கள்.. மேலும் சிலர் கோபப்படுகிறார்கள்.. ஆனால், மகாராஷ்டிராவில் ஒருத்தர் தற்கொலை வரை செல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

புடவை

புடவை

அவுரங்காபாத் அடுத்த முகுந்த் நகர் வசித்து வந்தவர் பெயர் சமதான் சபேல்.. 24 வயதாகிறது.. 6 மாதத்தக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. இவரது மனைவி இவரை விட 6 வயது மூத்தவராம்.. கல்யாணத்தின்போதும் சரி, கல்யாணத்துக்கு பிறகும் சரி, சேலை கட்டினால் தனக்கு பிடிக்கும் என்று சபேல் சொல்லி உள்ளார்.. அதற்கு அந்த பெண், தனக்கு சேலை கட்ட தெரியாது என்று சொல்லி இருக்கிறார்... 30 வயசு ஆகியும் ஏன் இன்னும் சேலை கட்ட தெரியவில்லை? இது கூடவா தெரியாது என்று மனைவியிடம் கோபமாக கேட்டிருக்கிறார்.

 பெட்ரூம்

பெட்ரூம்

அதை அவர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை போலும்.. இதனால் மனைவியின் அலட்சியம், சபேலுக்கு மனவருத்தத்தை தந்துள்ளது.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சபேல், வீட்டின் பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அதற்கு முன்னதாக ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார்.. அதை அவுரங்காபாத் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

கடிதம்

கடிதம்

அந்த கடிதத்தில், "என் மனைவிக்கு சேலை கட்ட தெரியவில்லை.. ஒழுங்காக நடக்க தெரியல.. பேச தெரியல.. மனம் வெறுத்துவிட்டேன்.. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதி வைத்திருக்கிறார்.. இதை படித்த அவுரங்காபாத் போலீசார் அதிர்ந்துபோய் விட்டனர்.. திருமணமானதில் இருந்தே தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்ததாகத் தெரிகிறது என்று முகுந்த்வாடி காவல் நிலைய பொறுப்பாளர் பிரம்மகிரி தெரிவித்துள்ளார்.

English summary
Wife does not know how to tie saree and Husband takes shocking decision in maharashtra சேலை கட்ட தெரியாததால் கணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X