• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அடங்காத" ரக்‌ஷிதா.. கணவனை கொன்று கிச்சனில் புதைத்து.. சடலத்தின் மேல் நின்று சமைத்து.. மிரண்ட போலீஸ்

Google Oneindia Tamil News

மும்பை: கணவனின் கழுத்தை நெரித்தார்.. கொலை செய்தார்.. கிச்சனில் குழி தோண்டி சடலத்தை புதைத்தார்.. அந்த இடத்தில் புதுசா டைல்ஸ் போட்டு ஒட்டி, அதன் மேலேயே நின்று சமைத்து கொண்டிருக்கிறார் அருமை மனைவி ரக்‌ஷிதா..!

தொற்றை எப்படி குறைப்பது, பலி எண்ணிக்கையை எப்படி மட்டுப்படுத்துவது, இந்த கொரோனாவை எப்படி ஒழித்து கட்டுவது என மத்திய, மாநில அரசுகள் கவலையில் இருந்தால், மற்றொரு பக்கம் வன்முறை சம்பவங்கள் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

இந்த லாக்டவுன் நேரத்திலும் இதற்கு பஞ்சமில்லை.. இந்த கொடுமையில் பெண்களே ஈடுபட்டு வருவது அதைவிட ஷாக் தருகிறது.

கணவன்

கணவன்

மும்பையில் தஹிசர் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் ரெய்ஸ் ஷேக்.. இவரது மனைவி பெயர் ரக்ஷிதா.. அங்குள்ள ஒரு ஜவுளிக்கடை சேல்ஸ்மெனாக வேலை பார்த்து வந்தார்.. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. எனினும், ரக்ஷிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அமித் விஷ்வகர்மாவுடன் தொடர்பு ஏற்பட்டது.. இது கள்ளக்காதலாக உருமாறியது..

சண்டை

சண்டை

ரியாஸ் வேலைக்கு போய்விட்டால், அமித் வீட்டிற்குள் நுழைந்துவிடுவாராம்.. ஒருநாள் விஷயம் ரியாஸுக்கு தெரிந்துவிட்டது... இதனால் மனைவியை கண்டித்துள்ளார்... ஆனாலும் ரக்ஷிதா இவர் பேச்சை கேட்கவில்லை.. தொடர்ந்து தம்பதிகளுக்கு சண்டையும் நடந்து வந்தது. இதனால் வெறுப்படைந்த ரக்‌ஷிதா, ரியாஸை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்த விஷயத்தை அமித்திடம் சொல்லவும், அவரும் ஓகே சொன்னார்.

 பிரச்சனை

பிரச்சனை

அதன்படி, சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு, நைட் நேரம் ரியாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.. அப்போது, ரியாஸின் கழுத்தை அமித் நெரிக்க தொடங்கினார்.. இதனால் வலி தாங்க முடியாமல் ரியாஸ் சத்தம்போட முயலவும், அதற்குள் ரக்‌ஷிதாவும் சேர்ந்து ரியாஸின் கழுத்தை நெரித்தார்.. இருவரும் நெரித்ததில், துடிதுடித்து இறந்துவிட்டார் ரியாஸ்.

 சாக்குமூட்டை

சாக்குமூட்டை

இதற்கு பிறகு, ரியாஸ் சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி, சமையலறையிலேயே குழி தோண்டி புதைத்துவிட்டனர்.. இவ்வளவும் நடக்கும்வரை, அந்த 2 குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர்.. பிறகு காலையில் அவரவர் வழக்கம்போல வேலையை செய்ய ஆரம்பித்தனர்... ஆனால், ரியாஸை காணாமல் அக்கம்பக்கத்தினர் ரக்ஷிதாவை கேட்டனர்.. இதற்கு ரக்ஷிதா சரியாக பதில் சொல்லவில்லை..

விசாரணை

விசாரணை

ஆனால், நாளைக்கு இதனால் தமக்கு பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்று நினைத்து, கணவரை காணோம் என்று போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் இது தொடர்பாக விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், அக்கம்பக்கத்தினர் அனைவரும், அமித் பற்றியும், அவர் அடிக்கடி வீட்டிற்குள் வந்து செல்வது பற்றியும் போலீசாரிடம் சொன்னார்கள். இந்த ஒரு க்ளூவை வைத்து போலீஸாரும், ரியாஸ் வீட்டில் சோதனை செய்தனர்..

கைது

கைது

அப்போதுதான், கிச்சனில் ஒரு பகுதியில் மட்டும் புது டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்ததை பார்த்தனர்.. அதில் சந்தேகம் வலுத்து, ரக்ஷிதாவிடம் கேட்டால், இதற்கும் மழுப்பலான பதிலையே சொன்னார்.. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட டைல்ஸ் பகுதியை போலீசார் சோதனை செய்தனர்.. அப்போது ரியாஷின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. அங்கேயே ரஷீதாவை போலீஸார் கைது செய்தனர்... ஆனால், அமித் எஸ்கேப் ஆகிவிட்டார்.. ரியாஸின் சடலம் தற்போது போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அமித்தையும் தேடி வருகிறார்கள்.. ரக்ஷிதாவிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

English summary
Wife killed husband near Mumbai and arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X