மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்

    மும்பை: புதிய அரசு அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்; இரு கட்சிகளுடனும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படுவோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    மும்பையில் தமது கட்சி எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

    Will work on common minimum program with Congress, NCP, says Uddhav Thackeray

    சிவசேனாவும் பாஜகவும் நீண்டகாலம் கூட்டணி அமைத்திருந்தன. தற்போது நாங்கள் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து செல்ல இருக்கிறோம்.

    காங்கிரஸ், சிவசேனாவிடம் நாங்கள் நேற்று முறைப்படி ஆதரவு கேட்டிருந்தோம். எங்களுக்கு ஆளுநர் 24 மணிநேரம்தான் அவகாசம் கேட்டிருந்தார்.

    என்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்என்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்

    குறைந்தது 48 மணிநேர அவகாசமாவது எங்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் ஆளுநர் எங்களுக்கு போதுமான அவகாசத்தை தரவில்லை. எங்களிடையே கொள்கை வேறுபாடுகள் உள்ளன.

    ஆகையால் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இரு கட்சிகளுடனும் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை முன்வைத்து இணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

    English summary
    Shiv Sena Chief Uddhav Thackeray said that they will work on a common minimum program with Congress, NCP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X