மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புல்வாமாவில் இறந்தவர்களுக்காக வாக்களியுங்கள்.. மோடி பகீர் பிரச்சாரம்.. வலுக்கும் எதிர்ப்பு!

முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை புல்வாமா தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை புல்வாமா தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடி தேர்தலுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. இந்த பிரச்சாரத்தில் அவர் இந்திய ராணுவம் குறித்து பேசினார்.

வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் போடுவதாக நாங்கள் எப்ப சொன்னோம்.. ராஜ்நாத் சிங் ஷாக் பரபரப்பு பேட்டி வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் போடுவதாக நாங்கள் எப்ப சொன்னோம்.. ராஜ்நாத் சிங் ஷாக் பரபரப்பு பேட்டி

மோடி என்ன சொன்னார்

மோடி என்ன சொன்னார்

மோடி தனது பிரச்சாரத்தில் பாலக்கோட் தாக்குதலை பாஜக நடத்தியது. பாஜக அரசு இதை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். உலக நாடுகள் நம்மை பார்த்து ஆச்சர்யம் அடைகிறது. ஆனால் நாங்கள் இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

முதல்முறை வாக்கு

முதல்முறை வாக்கு

நான் ஒரு விஷயம்தான் கேட்க விரும்புகிறேன். முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை பாலக்கோட் தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள். அங்கு தாக்குதல் நடத்திய நம் படைக்காக உங்கள் வாக்குகளை அளியுங்கள். புல்வாமாவில் இறந்த நமது வீரர்களுக்காக உங்கள் வாக்குகளை சமர்ப்பணம் செய்யுங்கள்.

பாகிஸ்தான் இப்படித்தான்

பாகிஸ்தான் இப்படித்தான்

பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையே அப்படித்தான் இருக்கிறது. பாகிஸ்தான் என்ன நினைத்ததோ அதைத்தான் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் சமர்ப்பணம் செய்து இருக்கிறது. அந்த கட்சியையா நீங்கள் நம்புகிறீர்கள், என்று கூறியுள்ளார்.

ராணுவம்

ராணுவம்

ராணுவ வீரர்கள், ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேச தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. ஆனால் மோடி அதை துட்சமாக கூட மதிக்காமல் தனக்கு தோன்றியதை பேசி இருக்கிறார். ராணுவத்தை வாக்கு சேகரிக்க அவர் பயன்படுத்தியது தவறு என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளது.

English summary
Will you dedicate your vote to the brave men who conducted Balakot airstrikes, to the CRPF men who lost their lives in Pulwama attack?” PM Modi asks first-time voters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X