மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு

கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    மகளை கடித்த பாம்பு...பாம்பை பிடித்து கடிவாங்கிய தாய்- வீடியோ

    மும்பை: பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்குள் பதட்டம், பரபரப்புடன் நுழைந்த அந்த பெண்ணை பார்த்ததும் நோயாளிகள் உட்பட எல்லாருமே தெறித்து ஓடினார்கள்.

    மும்பையில் கொஞ்ச நாளாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எத்தனையோ பேர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு அவதிக்குள்ளாகி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்போது மழை விடுமோ, எப்போது இயல்பு நிலை வருமோ என்றும் மும்பை மக்கள் காத்துள்ளனர்.

    பாத்ரூம் பக்கெட்டில் பிணமான ஷன்மதி.. கொலை செய்த குடும்பத்தினர் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்பாத்ரூம் பக்கெட்டில் பிணமான ஷன்மதி.. கொலை செய்த குடும்பத்தினர் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்

    சுல்தான்

    சுல்தான்

    இந்நிலையில் தாராவியில் உள்ள பால்கிபூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வரும் பெண்மணி சுல்தான்கான். வயசு 32. இவர் தனது வீட்டின் கிச்சனில் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    எலியா?

    எலியா?

    அப்போது அவரது மகளை ஏதோ கடித்துள்ளது போலும். அதனால் தன் அம்மாவிடம் இதை சொல்லவும், ஏதாவது எலி, பூச்சாக இருக்கும் என்று சொல்லி உள்ளார். அந்த சமயத்தில் திடீரென ஒரு பாம்பு அவர்களை கடந்து ஓடியது. அப்போதுதான் தெரிந்தது மகளை கடித்தது அந்த பாம்புதான் என்று. உடனே சுல்தான் பயந்து கொண்டு ஓடவில்லையே, பின்னாடியே போய் அந்த பாம்பை பிடித்துவிட்டார்.

    ஆஸ்பத்திரி

    ஆஸ்பத்திரி

    ஒரு கையில் பாம்பு, இன்னொரு கையில் மகளை பிடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு பதறியடித்து கொண்டு வந்தார். சுல்தான்கானை பார்த்ததும் நோயாளிகள் உட்பட இப்போது பதறியடித்து கொண்டு ஓடினர். மகளுக்கு பாம்பு கடித்துவிட்டது என்றதும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சுல்தான்கானிடம் அங்கிருந்தோர் கேட்டே விட்டார்கள். "மகளை கூட்டிட்டு வந்தீங்க சரி, எதுக்காக பாம்பை தூக்கிட்டு வந்தீங்க?" என்றார்.

    எந்த பாம்பு?

    எந்த பாம்பு?

    அதற்கு சுல்தான்கான், "எங்க வீடு பக்கத்தில் பார்க் இருக்கு. அதனால மழை பெய்தால், எங்கள் பகுதியில எப்பவுமே தண்ணீர் தேங்கி இருக்கும். அதனால எலி, பாம்பு, கொசு என பல பூச்சிகளால் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். ஆனா மகளை பாம்பு கடிச்சிருக்கும்னு எதிர்பார்க்கல. கடித்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என்று தெரிந்தால்தானே அதுக்கு தகுந்த மாதிரி சிகிச்சை தர முடியும். டாக்டருக்கும் மருத்துவம் பார்க்க ஈசியா இருக்கும்" என்றார்.

    அசால்ட்

    அசால்ட்

    இப்படி சுல்தான் பேசியது விவரமாக இருந்தாலும், பாம்பை லபக்கென்று பிடித்தபோது, அது சுல்தானின் விரலையும் கொத்தி உள்ளது. அப்படி இருந்தும் தன் உயிரைப் பற்றிகூட கவலைப்படாமல் அசால்ட்டாக பாம்பை தூக்கி காரில் போட்டுக் கொண்டு, மகளையும் அழைத்து வந்துள்ளார் இந்த சுல்தான்!

    English summary
    Woman Sulthan carries snake and shows to the doctors after it bit her and daughter in Maharashtra
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X