மைசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

பிரசாதம் சாப்பிட்டு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா?.. 12 பலி, 2 பேர் கைது- வீடியோ

    மைசூர்: கர்நாடக மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    கர்நாடக மாவட்டம் சமராஜ் நகர் பகுதியில் உள்ள என்ற சுலிவாடி கிராமத்தில், கிச்சுமராண்டாஎன்ற அம்மன் கோயில் உள்ளது.

    இந்த கோயிலின் கோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் கோயிலில் பிரசாதமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

    மயக்கம், வயிற்றுவலி

    மயக்கம், வயிற்றுவலி

    ஆனால் பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரசாதம் சாப்பிட்டவர்கள் கொஞ்ச நேரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுவலி என அவதிக்கு உள்ளாயினர்.

    82 பேர் அனுமதி

    82 பேர் அனுமதி

    எனவே உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில்13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தனர். மேலும் 82 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

    மாதிரி பரிசோதனை

    மாதிரி பரிசோதனை

    இது தொடர்பாக ஹானூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். கோயிலில் வழங்கப்பட்ட பிரசாத மாதிரி பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் உணவு நச்சு காரணமாகத்தான் பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன் தகராறு

    முன் தகராறு

    இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெறுகிறது.2 கும்பல்கள் இடையே கோயில் நிர்வாக பொறுப்புகளில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    முதல்வர் குமாரசாமி

    முதல்வர் குமாரசாமி

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் குமாரசாமி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும்,உத்தரவிட்டார் . அத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் வந்து சந்தித்த ஆறுதல் தெரிவித்தும் சென்றார்.

    பரிதாப மரணம்

    பரிதாப மரணம்

    இதுகுறித்து ஒருவர் சொல்லும்போது, இந்த பிரசாதத்தை க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பிட ஆரம்பிக்கும்போதே அதிலிருந்து ஒரு வாடை வருவதாக ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டார்கள். அதனால் ஒரு வாய், 2 வாய் எடுத்து சாப்பிட்டவர்கள் எல்லாம் வாந்தி, வயிற்றுவலியுடன் பிழைத்து கொண்டார்கள். பசியால் எல்லா பிரசாதத்தையும் சாப்பிட்டவர்கள்தான் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

    English summary
    Karnataka 13 dead and 82 hospitalised after eating Prasad in Chamrajnag. The incident has been reported as a result of prejudice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X