எல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி!

மைசூரு: மைசூரு அருகே கள்ளக்காதலி வீட்டின் பரணில் ஒளிந்திருந்த பூசாரியை அவரது மனைவி மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு அருகே நாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜூ (35). இவர் அந்த கிராமத்தில் உள்ள கம்பாளம்மா கோயிலின் பூசாரியாக உள்ளார். இது மட்டுமல்லாமல் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு மாந்த்ரீக வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவராஜூக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்தது தெரிகிறது.
[ஜோசியம் பார்க்க வந்த மல்லிகா.. பிரச்சினையை விசாரித்த ஸ்ரீதர்.. கடைசியில் நடந்தது என்னன்னா!]

சந்தேகம்
இது அரசல் புரசலாக பூசாரியின் மனைவியின் காதுகளை எட்டியது. இதுகுறித்து தேவராஜூடம் கேட்டுள்ளார். அதற்கு அவரோ தான் ஒரு பூசாரி. தான் எப்படி அப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியும் என அவரிடமே கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் மனைவிக்கு சந்தேகம் தீரவில்லை.

வீட்டினுள் நுழைவது
கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று அவருடன் கொஞ்சி குலாவும்போது கையும் களவுமாக பிடித்து கிராம மக்களிடம் பிடித்து கொடுக்க முடிவு செய்தார். இந்நிலையில் தேவராஜூ தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதும் அவரை மனைவியும் அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்தார். அப்போது கள்ளக்காதலியே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்து கூறிய மனுஷன் ஒரு வீட்டினுள் நுழைவதை பார்த்தவுடன் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

கள்ளக்காதலி
பின்னர் கிராம மக்களிடம் விஷயத்தை கூறி அவர்களையும் பூசாரி மனைவி, கள்ளக்காதலி வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டு கதவை கிராம மக்கள் தட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜூ செய்வதறியாமல் கள்ளக்காதலியின் வீட்டின் பரணில் ஒளிந்து கொண்டார்.

பரபரப்பு
உடனே அவரை வெளியே இழுத்து போட்டு மனைவியும், கிராம மக்களும் வெளு வெளுவென வெளுத்தனர். பின்னர் தேவராஜூவை ஆலனஹள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட தேவராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவாரம் பூ காமெடி
இந்த சம்பவத்தை பார்க்கும் போது கவுண்டமணி நடித்த ஆவாரம்பூ திரைப்படத்தில் ஷார்மிலி கடன் பாக்கிகளை கணவர் பயில்வான் ரங்கநாதனிடம் கூறுவார். அப்போது அவர் எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பார். அதற்கு கவுண்டமணியோ எல்லாத்தையும் மேல் இருக்கிறவன் பாத்துப்பானு என் தலையிலேயே
கட்டினால் என்னடா அர்த்தம், கீழே ஒருத்தன் படுத்திருக்கான் அவனுக்கும் பிரிச்சி கொடுங்க என்பார். அந்த கதையால்லே இருக்கு இந்த மைசூரு சம்பவம்.