மைசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி

Google Oneindia Tamil News

மைசூர்: எடியூரப்பா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பாஜக எம்பி ஷோபா கரந்தலாஜே இன்று மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 1001 படியேறி பிரார்த்தனை செய்தார் பெண் எம்.பி. ஷோபா கரந்தலாஜே.

எடியூரப்பாவிற்கு நீண்டகாலமாக தீவிர விசுவாசியாக இருப்பவர் ஷோபா கரந்தலாஜே. எடியூரப்பா குடும்பத்தின் ஒரு பெண் போலவே பாசம் காட்டுபவர் அவர். இதனாலேயே பல முறை பாஜக தலைவர்களில் சிலர், ஷோபா கரந்தலாஜேவுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரக்கூடாது என எடியூரப்பாவை, வலியுறுத்தியுள்ளது வரலாறு.

BJP Karnataka MP, Shobha Karandlaje climbs 1001 steps of Sri Chamundeshwari Devi Temple

ஆனால், ஷோபா கரந்தலாஜேவுக்கு லோக்சபா தேர்தலில் டிக்கெட் பெற்றுக் கொடுத்த எடியூரப்பா, அவர் எம்.பி.யாக வெற்றிபெற முக்கிய காரணமாகவும் இருந்தார். ஒருவேளை எடியூரப்பா தலைமையில் கர்நாடகாவில் அரசு அமைந்தால், அப்போது ஷோபா கரந்தலாஜேவுக்கு அமைச்சர் பதவி கேரண்டி என்கிறார்கள்.

இந்த நிலையில்தான், மைசூரிலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வெறும் காலில் 1001 படிக்கட்டுகள் ஏறிச் சென்று இன்று வழிபட்டார் ஷோபா கரந்தலாஜே. அம்மன் கோவில் மலை மீது உள்ளது பலருக்கும் தெரிந்திருக்கும். எனவே அங்கு படிக்கட்டுகள் உண்டு.

இதே நேரத்தில், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி சகோதரரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான ரேவண்ணாவும், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.

English summary
BJP Karnataka MP, Shobha Karandlaje climbs 1001 steps of Sri Chamundeshwari Devi Temple to pray for BS Yeddyurappa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X