மைசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க

Google Oneindia Tamil News

மைசூர்: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே இன்று அதிகாலை வாகனங்களில் சென்றவர்கள் அப்படியே ஷாக்காகி நின்றுவிட்டனர்.

ஆத்தாடி எந்தா தண்டி.. என்று சொல்லும் அளவுக்கு, 2 பெரிய யானைகள், அவற்றின் 2 குட்டிகளுடன் வாகனங்களை வழிமறித்துள்ளதே இதற்கு காரணம்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

வெளியானது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 88.78% தேர்ச்சி.. சென்னை மண்டலத்திற்கு 3வது இடம் வெளியானது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 88.78% தேர்ச்சி.. சென்னை மண்டலத்திற்கு 3வது இடம்

வன விலங்குகள்

வன விலங்குகள்

ஆசனூர், தலமலை மற்றும் பவானிசாகர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம்.

5 யானைகள்

5 யானைகள்

இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் மூன்று யானைகள் மற்றும் இரண்டு குட்டிகள் என ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்றபடி வாகனங்களை வழிமறித்தன.

வாகனங்கள் நிறுத்தம்

வாகனங்கள் நிறுத்தம்

குட்டிகளுடன் நின்ற யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் யானைகள் குட்டிகளுடன் சாலையில் நடமாடிய பின் வாகனங்களுக்கு வழிவிட்டு சாலையோர வனப்பகுதிக்கு சென்றன.

வாகன ஓட்டிகள் அச்சம்

வாகன ஓட்டிகள் அச்சம்

இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் அந்த இருளில், கருப்பு நிற யானைகளை மொத்தமாக பார்த்த வாகன ஓட்டிகள் அடிவயிறு கலங்கிவிட்டதாம். யானைகள் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த ஜாக்கிரதையோடு வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.

English summary
Early this morning, a herd of five elephants, including three elephants and two cubs, diverted vehicles from the Satyamangalam-Mysore National Highway near Asansur on the Tamil Nadu-Karnataka border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X