மைசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    HD Kumaraswamy criticizes PM Modi

    மைசூரு: பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்துக்கு நேரில் வந்து விக்ரம் லேன்டர் தரையிறங்குவதைப் பார்க்க வந்தது அபசகுனமாக போய் விட்டதாக கூறியுள்ளார் கர்நாடக முதல்வராக இருந்த எச்.டி.குமாரசாமி.

    என்னதான் அதீத மூட நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், ஜோசியத்தில் நிறைய நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும், முதல்வராக இருந்த ஒருவர், பிரதமரைப் பார்த்து அபசகுனம் என்று கூறியிருப்பது குமாரசாமிக்கு கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.

    HDK says Modi bring the bad luck to moon mission

    இஸ்ரோ மையத்துக்குள் பிரதமர் காலெடுத்து வைத்ததுமே துரதிர்ஷ்டம் வந்து ஒட்டிக் கொண்டு விட்டதாகவும் கூறியுள்ளார் குமாரசாமி. இதன் காரணமாகவே விக்ரம் லேன்டருக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் சொல்லியுள்ளார் குமாரசாமி.

    ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்.. ஹைகோர்ட் இடைக்கால தடைஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்.. ஹைகோர்ட் இடைக்கால தடை

    மைசூர் வந்த அவர் அங்கு பேசுகையில், விஞ்ஞானிகளின் 10-12 ஆண்டு கால உழைப்புதான் சந்திரயான் 2. ஆனால் என்னமோ தன்னால்தான் சந்திரயான் 2 நிலவில் இறங்குவது போல காட்டிக் கொள்ள முயற்சித்தார் பிரதமர் மோடி. இதற்காகவே அவரே நேரடியாக பெங்களூர் இஸ்ரோ மையத்துக்கும் வந்தார். விளம்பரத்துக்காகவே அவர் வந்தார். ஆனால் அவர் இஸ்ரோ மையத்துக்குள் காலெடுத்து வைத்த நேரம் அபசகுனமாக போய் விட்டது. விக்ரம் லேன்டருக்கும் இஸ்ரோவுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று கூறினார் குமாரசாமி.

    குமாரசாமியின் இந்த குயுக்தியான பேச்சு பாஜகவினரை எரிச்சல்படுத்தியுள்ளது. சகட்டுமேனிக்கு குமாரசாமியை அவர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வசை பாடி வருகின்றனர்.

    English summary
    Former Karnataka CM HD Kumaraswamy has said that PM Modi brought the bad luck to moon mission when he stepped into ISRO center in Bangalore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X