மைசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரைபுரண்டோடி வரும் வெள்ளம்.. நிறைந்தது கபினி அணை.. விநாடிக்கு 90,000 கன அடி நீர் திறப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை..! மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு...

    மைசூர்: கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை காரணமாக கபினி அணை முழு கொள்ளவை எட்டியதால் 90,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இனி ஒரு லட்சம் கனஅடிநீர் வரை திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி கபினி அணை நீரின் மொத்த கொள்ளளவான 2282 அடியில் 2278 அடி வரை நிறைந்து இருந்தது. இந்நிலையில் அணை இன்று கிட்டதட்ட முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரை அப்படியே வெளியற்றி வருகிறார்கள்.

    heavy inflows into the Kabini dam, so 40000 cusecs water released to Tamil Nadu

    நேற்று மாலை அணைக்கு வரும் நீரின் அளவு 18 ஆயிரத்து 400 கன அடியில் இருந்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 45 ஆயிரம் கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. இந்த அளவு படிப்படியாக மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு நீரின் அளவு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒருலட்சம் கனஅடிநீர் வரை திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    ஏனெனில் குடகு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கபினி அணைக்கு இனிவரும்நீர் அப்படியே வெளியேற்றப்பட்ட வாய்ப்ப உள்ளது. இந்த தண்ணீர் மொத்தமும் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு விரைவில் வந்து சேரும் என்பதால் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    heavy inflows into the Kabini dam, so 40000 cusecs water released to Tamil Nadu, warning issued by govt
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X