மைசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்!

மைசூரில் பெண்ணின் துப்பட்டாவை வேண்டும் என்றே இழுக்கவில்லை அது விபத்து என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துப்பட்டாவை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு!

    பெங்களூர்: மைசூரில் பெண்ணின் துப்பட்டாவை வேண்டும் என்றே இழுக்கவில்லை அது விபத்து என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துப்பட்டாவை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    மைசூரில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெண் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் விழா ஒன்றில் பெண் ஒருவர் சித்தராமையாவை நோக்கி கோபமாக நிறைய கேள்விகளை எழுப்பினார். சித்தராமையா அந்த பெண்ணை அமர சொன்னார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து சித்தராமையாவை நோக்கி கோபமாக கத்தினார்.

    வைரல் வீடியோ

    இதனால் சித்தராமையா அந்த பெண்ணின் கையில் இருந்த மைக்கை பிடுங்க சென்றார். ஆனால் மைக்கிற்கு பதிலாக அவர் அந்த பெண்ணின் துப்பட்டாவை கையில் பிடித்து இழுத்துவிட்டார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இணையத்தில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    சித்தராமையா பதில்

    சித்தராமையா பதில்

    இந்த சம்பவம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தற்போது சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அந்த பெண்ணின் மைக்கை வாங்கத்தான் சென்றேன். அவர் பேசிக்கொண்டே இருந்தார். அது அங்கிருந்தவர்களுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. இது ஒரு விபத்து.

    தங்கைதான்

    தங்கைதான்

    இதை எல்லோரும் தேவையில்லாமல் பெரிதிபடுத்துகிறார்கள். அந்த பெண் எனக்கு தங்கை மாதிரி. எனக்கு அவரை 15 வருடமாக தெரியும். இதை இதோடு விட்டுவிடுங்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

    விளக்கம்

    விளக்கம்

    இந்த பெண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அவரின் பெயர் ஜமலா என்பதாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எனக்கு இதில் எந்த கோபமும் இல்லை. சித்தராமையாதான் எப்போதும் சிறந்த முதல்வர். நான் அவர் மகன் தொகுதிக்கு வராத கோபத்தில் பேசிவிட்டேன். என் மீதுதான் தவறு நான் டேபிளை தட்டி பேசி இருக்க கூடாது, என்று விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Former Karnataka CM & Congress leader Siddaramaiah on him misbehaving with a woman: When I was trying to stop a long speech of a party worker that incident happened, it was an accident, there was no bad intention. I know her since 15 years, she is just like my sister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X