நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா பாதிப்பிலிருந்து.. காவிரி டெல்டா மீண்டு வர பல வருடமாகும்.. திகில் தரும் கள நிலவரம் #savedelta

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்-வீடியோ

    நாகப்பட்டனம்: காவிரி டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கள நிலவரங்கள் தரும் தகவல்கள் அதை விட அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன.

    ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதுதவிர இன்னொரு மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டம் புதுக்கோட்டையாகும்.

    பல ஊர்கள், ஏகப்பட்ட கிராமங்கள் முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளன. இங்கு மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் இன்னும் முழுமையாக வெளி வராமல் உள்ளன. இவர்களுக்குத் தேவையான நிவாரணங்களும் கூட இதுவரை போய்ச் சேரவில்லை என்று சொல்கிறார்கள்.

    வலுவிழந்த 'கஜா' மீண்டும் புயலாக மாறுகிறது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வலுவிழந்த 'கஜா' மீண்டும் புயலாக மாறுகிறது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    மிகப் பெரிய பாதிப்பு

    மிகப் பெரிய பாதிப்பு

    பட்டுக்கோட்டை மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாம். அங்கு மின் கம்பங்கள் மிகப் பெரிய அளவில் விழுந்துள்ளன. பயிர்ச்சேதம் மிகப் பெரியதாக உள்ளது. பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டன.

    அதிராம்பட்டனத்தில் பெரும் பாதிப்பு

    அதிராம்பட்டனத்தில் பெரும் பாதிப்பு

    அதேபோல அதிராம்பட்டனம் பகுதியும் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு கிராமங்களில் மக்கள் கால்நடை முதல்கொண்டு இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உதவிகள் இதுவரை வரவில்லையாம்.

    வேதனையில் வேதாரண்யம்

    வேதனையில் வேதாரண்யம்

    வேதாரண்யம் வரலாறு காணாத சீரழிவை சந்தித்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு வீடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக சீர்குலைந்து போயுள்ளது.

    மின்னல் வேக உதவிகள் தேவை

    மின்னல் வேக உதவிகள் தேவை

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் இதுவரை வரவில்லை. குடிநீர் கூட இல்லாத நிலையில் பல ஊர்கள் தத்தளிக்கிறதாம். காரணம், மின்சாரம் இன்னும் சீராகவில்லை என்பதால். எனவே இவர்களுக்கு உணவு, குடிநீர் உடனடித் தேவையாக உள்ளது.

    மீண்டு வர பல வருடமாகும்

    மீண்டு வர பல வருடமாகும்

    தற்போது நிலையில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள டெல்டா மாவட்டத்துக்காரர்கள் மீண்டு வர குறைந்தபட்சம் 3 அல்லது 4 வருடமாகும் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக விவசாயிகள் மிகப் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர்.

    English summary
    Cauvery Delta will needs many years to recover fully from Cyclone effect. Cyclone Gaja has made such a devastating damages to the region.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X