நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில்.. நாகை, கடலூரை கலக்கிய எடப்பாடியார்.. அதிரடி ஆய்வுகள்.. திட்ட உதவிகள்.. மெகா திட்டங்கள்!

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்று நாகையில் முதல்வர் உரையாற்றினார்

Google Oneindia Tamil News

நாகை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பணிபுரிகின்ற இடங்களிலும் சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். நாகை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ள முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்..

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.

கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே நீட் தேர்வு நடத்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே நீட் தேர்வு நடத்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 திட்ட பணி

திட்ட பணி

அத்துடன், கடலூர் மாவட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ.73.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து ரூ.32.17 கோடியில் 22 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்... மேலும் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 சோதனைகள்

சோதனைகள்

இதையடுத்து, நாகை மாவட்டத்துக்கு முதல்வர் நேரடியாக சென்று அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.. கொரோனா நடவடிக்கைகள் எந்த அளவுக்கு மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும், சோதனைகள் குறித்தும் விவரங்களை சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்... பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி பல்வேறு சிறப்பு பணிகளை துவக்கி வைத்தார்.

 விவசாயிகள்

விவசாயிகள்

ரூபாய் 207.56 கோடி மதிப்பில் வளர்ச்சி ஏராளமான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.. அதேபோல 43.60 கோடி ரூபாய் மதிப்பில் 13 முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைத்தார்.. அந்த திட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தார். விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

முகாம்கள்

முகாம்கள்

பிறகு முதல்வர் பேசும்போது, "தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.. பணிபுரிகின்ற இடங்களிலும் சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நாளொன்றுக்கு 70,000 பேருக்கு டெஸ்ட்கள் நடத்தப்படுகின்றன.. தொற்றை பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன... வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது.

 தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகின்றன.. தமிழகத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த 7.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

English summary
CM Edapadi palanisamy inspects Nagai District today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X