நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகையில் வயலில் இறங்கி.. வேட்டியை மடித்துக் கட்டி.. நாற்று நட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

நாகை: நாகையில் வயலில் இறங்கி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாற்று நட்டார்.

நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைப்பதற்காக நீடாமங்கலம் வழியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரில் சென்று கொண்டிருந்தார்.

CM Edappadi Palanisamy plants a paddy sapling in a land

அப்போது நீடாமங்கலத்தை அடுத்த கொண்டையாறு கிராமத்தில் வயலில் இறங்கி பெண்கள் நாற்று நட்டு கொண்டிருந்தனர். அதை பார்த்த முதல்வர் காரை நிறுத்த சொன்னார். பின்னர் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு வயலில் இறங்கினார்.

பெண்களிடம் இருந்து நாற்றை வாங்கி நாற்று நடத் தொடங்கினார். இதை பார்த்த அங்கிருந்த விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் எங்களுக்கு ஒரு விவசாயி முதல்வராக கிடைத்துள்ளார். அது பெருமை அளிக்கிறது என்றனர்.

CM Edappadi Palanisamy plants a paddy sapling in a land

அப்போது, முதல்வர், நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். இப்போதும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். மேலும், தமிழகத்தில் பணி நிமித்தமாக செல்லும் இடங்களில் விவசாயிகளிடம் பேசி குறைகளை கேட்டறிகிறேன். எமது அரசு விவசாயம் சார்ந்த நல்ல திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கும். விவசாயம் தான் நாட்டின் உயிர்நாடி என்றார் தமிழக முதல்வர்.

க அன்பழகனுக்கு இறுதி அஞ்சலியில் உருக்கம்.. இனி எப்போது பார்ப்போம் என ஸ்டாலின், துரைமுருகன் கண்ணீர்!க அன்பழகனுக்கு இறுதி அஞ்சலியில் உருக்கம்.. இனி எப்போது பார்ப்போம் என ஸ்டாலின், துரைமுருகன் கண்ணீர்!

ஏற்கெனவே சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு ஒரு கையில் நெற்கதிருடனும், மற்றொரு கையில் அரிவாளுடனும் எடப்பாடி பழனிச்சாமி இருப்பது போன்ற படங்கள் வெளியானது.

CM Edappadi Palanisamy plants a paddy sapling in a land

இதை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தான் ஒரு விவசாயி என்பதை முதல்வர் மறக்கவில்லை என்பதை இப்படங்கள் காட்டுவதாக பாராட்டினார்.

English summary
CM Edappadi Palanisamy plants paddy saplings in a land near Needamangalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X