நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா!

கள்ளக்காதலியின் கணவரை கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா!..இவருக்கு ஒரு கள்ளக்காதலி-வீடியோ

    நாகை: இதோ இந்த பெரியவர் இருக்கிறாரே.. இவர் பெயர் அமீர்கான்.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. அந்த கள்ளக்காதலியின் கணவனை இவர்தான் ஆள் வைத்து கொலை செய்துள்ளார்!

    நாகை மாவட்டம் தலைஞாயிறு சர்க்கரை ஆலை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் கடந்த ஜூலை மாசம் 17-ம் தேதி நாராயணமங்கலம் என்ற இடத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் இவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    cooperative bank secretary arrested in murder case

    ஆனால், இந்த கொலை ஆரம்பத்தில் சாலை விபத்தாக பதிவு செய்யப்பட்டு, கேஸ் மூடி மறைக்கப்பட்டது. ராஜகோபால் விபத்தில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இது விபத்து இல்லை, கொலை என்பதை அந்த பகுதி மக்களே பகிரங்கமாக சொல்ல ஆரம்பித்தனர். இதன்பிறகு மயிலாடுதுறையில் டிஎஸ்பி விசாரணையை கையில் எடுத்தார். அப்போதுதான், கொலை வழக்காக மாற்றப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது சம்பந்தமான விசாரணையில், இறந்துபோன ராஜகோபால் மனைவி பெயர் ஷீலாதேவி. இவர் அமீர்கான் என்பவருடன் கள்ள உறவில் இருந்துள்ளார். அமீர்கான் இளந்தோப்பு கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்தவர். ஏகப்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரர். வயசு 54 ஆகிறது!

    cooperative bank secretary arrested in murder case

    இந்த கள்ளக்காதலை ராஜகோபால் கண்டித்துள்ளார். ஆனால், ஷீலாதேவி ராஜகோபாலை விடமுடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். கள்ளக்காதலை ராஜகோபால் பிரிக்கவும் அமீர்கான் ஆத்திரம் அடைந்தார். மேலும், தனது சொத்துக்களை ராஜகோபால் அபகரிப்பதாக நினைத்து கொண்டு, அதற்காக கொலையும் செய்ய துணிந்துவிட்டார் அமீர்கான்.

    5 பேரை ஏற்பாடு செய்து அவர்களுக்கு பணமும் தந்தார்.. இந்த கூலிப்படைதான் ராஜகோபாலை கொன்றது. இதெல்லாம் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, தலைமறைவாக இருந்த அமீர்கானை போலீசார் தேடி வந்தனர். கிட்டத்தட்ட 4 மாத காலத்துக்கு பிறகு இப்போது அமீர்கான் கைதாகி உள்ளார். இதைதவிர கொலையாளிகள் 4 பேரும் கைதாகினர். இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    English summary
    cooperative bank secretary arrested murder case near nagai due to illegal relationship
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X