நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்

தனிமைப்படுத்தப்பட்ட தொழில் அதிபர் காரில் தப்பிவிட்டார்

Google Oneindia Tamil News

நாகை: அமுதாவை பார்ப்பதற்காக "டாக்டர்" என காரில் ஸ்டிக்கர் ஒட்டி வந்த அப்துல் அகமது என்ற முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபோது அங்கிருந்து விடிகாலை நேரத்தில் தப்பி ஓடி வந்த மலேசிய ஹோட்டல் அதிபர்தான் இந்த அப்துல் அகமது!!

Recommended Video

    திடீரென அதிகரித்த கொரோனா... முதல்வர் எச்சரிக்கையின் பின்னணி என்ன?

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா.. இவருக்கு 37 வயதாகிறது.. கணவனை பிரிந்து வாழ்பவர்.. பிழைப்புக்காக மலேசியா நாட்டு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போதுதான் ஹோட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் என்பவர் பழக்கமானார். அப்துல் அகமது வயது 57 ஆகிறது!!

    இவரது சொந்த ஊர் ராமநாதபுரம்... இவருக்கு மலேசியாவில் மட்டும் 4 ஹோட்டல்கள் உள்ளன... இதை தவிர ராமநாதபுரத்தில் 5 ஹோட்டல்களும் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அமுதா மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

    சொகுசு கார்

    சொகுசு கார்

    இதனிடையே அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருந்தார். அப்போது அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பினார்.. ஊரடங்கு உள்ளதால் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கவும், தன்னுடைய சொகுசு காரில் (EMERGENCY DOCTOR) "மருத்துவம் அவசரம்" என்று ஒரு போலியான ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அமுதா வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    200 கிலோ மீட்டர் காரை ஓட்டிக் கொண்டு வந்த இந்த விஷயம் சுகாதார துறையினர், போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அமுதா வீட்டிற்கு விரைந்தனர்.. அப்துல் அகமது அங்குதான் இருந்தார்.. அவர்களுடன் அமுதாவின் மகள், மகனும் என 4 பேரும் வீட்டில் இருந்தனர்.. வீட்டிற்குள் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினர்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    அமுதா, அப்துல் அகமது மைதீன், அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் உடனடியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். ஓட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.. அவரை தீவிரமாகவும் கண்காணித்து வந்தனர்.

    தப்பி ஓட்டம்

    தப்பி ஓட்டம்

    இந்நிலையில், நேற்று விடிகாலை 4 மணிக்கு அப்துல் அகமது அவர் வந்த காரிலேயே தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது கார் வீட்டுக்கு வெளியே இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோதுதான் அவர் தப்பி சென்றது தெரியவந்தது... இப்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமுதாவை பார்க்க ரிஸ்க் எடுத்து வந்த அப்துல் அகமதுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்!

    English summary
    coronavirus: ramnad businessman escaped from isolated in his lovers house
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X