• search
நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கஜா புயல் நிவாரணம்.. குவிகிறது உதவிகள்.. தீயாய் வேலை செய்யும் சமூக வலைதளங்கள்

|
    கஜா புயல் நிவாரணம்... தீயாய் வேலை செய்யும் இளைஞர்கள்- வீடியோ

    நாகை: தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் நிவாரண உதவிகள் புயல் பாதித்த மக்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது!

    கஜா தந்துவிட்டு போன இழப்பினை சரி செய்ய முடியாமல் தமிழகம் தவித்து வருகிறது. அரசு ஒரு பக்கம், மக்கள் ஒரு பக்கம் என மாறி மாறி உதவிகளை செய்து மாவட்ட மக்களை கை தூக்கி விட்டு வருகிறார்கள்.

    டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒன்று என்றால் மற்ற மாவட்ட மக்கள் சும்மா இருந்து விடுவார்களா என்ன? சின்ன சின்ன குழந்தைகள்கூட உண்டியலை வசூல் செய்து பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு!

    மனசு கனக்கிறது

    மனசு கனக்கிறது

    பள்ளி மாணவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை நிவாரண பொருட்களை திரட்டி கொண்டு போய் தருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மீட்பு பணிகளில் இறங்கி உள்ளனர். அப்போது, ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சொல்லும்போது, "சேதமடைந்ததை கண்ணால் பார்க்கவே முடியவில்லை.. மனசு கனக்கிறது" என்று சொல்கிறார்கள்.

    நிவாரண பொருட்கள்

    நிவாரண பொருட்கள்

    இதை தவிர நல்லுள்ளம் படைத்தவர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். ஆரணியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக அரிசி, சர்க்கரை, மெழுகுவர்த்தி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி, பருப்பு வகைகள், மருந்துகள், குடிநீர் பாட்டில்கள் பொது மக்களே மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி விட்டு வந்தனர்.

    மீட்பு உதவிகள்

    மீட்பு உதவிகள்

    அவிநாசியில் இருந்தும் அத்தியாவசிய பொருட்களை ரூ.2 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதுபோக, தனிநபர்கள், சற்று வசதி படைத்தவர்கள், காய்கறிகள், உள்ளாடைகள், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள் என எல்லாவற்றையும் கொண்டு போய் நேரிலே கொடுத்துவிட்டு, அவர்களுக்கு முடிந்த மீட்பு உதவியையும் செய்து விட்டு வருகிறார்கள்.

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்

    பட்டுக்கோட்டை பகுதிக்கு மட்டும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்கள், வாட்ஸ் அப் மூலம் நிவாரண பொருட்கள் வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். வாட்ஸ்அப் மூலமும் அத்தியாவசிய பொருட்கள் ஒரு பக்கம் சேர்ந்து வருகிறது.

    நெகிழ்ச்சி தருகிறது

    நெகிழ்ச்சி தருகிறது

    பெரிய அளவிலான உதவிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கொண்டு வர உடனடி தேவையாக இருக்கிறது. என்றாலும், இப்படி தமிழகத்தின் நாலாபுறமும் டெல்டா மக்களுக்கு உதவிகள் சேர்ந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    நாகப்பட்டிணம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
    வருடம்
    வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
    2019
    செல்வராஜ் சிபிஐ வென்றவர் 5,22,892 52% 2,11,353
    தாழை சரவணன் அஇஅதிமுக தோற்றவர் 3,11,539 31% 2,11,353
    2014
    கோபால். டாக்டர் கெ அஇஅதிமுக வென்றவர் 4,34,174 47% 1,06,079
    விஜயன். எ.கெ.எஸ் திமுக தோற்றவர் 3,28,095 35% 0
    2009
    விஜயன் எ கெ எஸ் திமுக வென்றவர் 3,69,915 48% 47,962
    செல்வராஜ் எம் சிபிஐ தோற்றவர் 3,21,953 42% 0
    2004
    விஜயன், எ.கெ.எஸ். திமுக வென்றவர் 4,63,389 62% 2,16,223
    அர்ச்சுனன் பி ஜெ அஇஅதிமுக தோற்றவர் 2,47,166 33% 0
    1999
    விஜயன், எ.கெ.எஸ் திமுக வென்றவர் 3,42,237 50% 22,466
    செல்வராசு எம். சிபிஐ தோற்றவர் 3,19,771 47% 0
    1998
    செல்வரசு, எம். சிபிஐ வென்றவர் 3,75,589 59% 1,31,303
    கோபால், டாக்டர் கெ. அஇஅதிமுக தோற்றவர் 2,44,286 38% 0
    1996
    செல்வராசு எம் சிபிஐ வென்றவர் 3,94,330 57% 2,21,346
    கன்னிவன்னன் எம் காங்கிரஸ் தோற்றவர் 1,72,984 25% 0
    1991
    பத்மா (பெ) காங்கிரஸ் வென்றவர் 3,27,413 50% 25,716
    செல்வராசு எம். சிபிஐ தோற்றவர் 3,01,697 46% 0
    1989
    செல்வராசு, எம் சிபிஐ வென்றவர் 3,41,921 49% 21,523
    வீரமுரசு என்.எஸ். காங்கிரஸ் தோற்றவர் 3,20,398 46% 0
    1984
    மகாலிங்கம், எம். அஇஅதிமுக வென்றவர் 3,00,912 50% 2,289
    முருகய்யன் கெ. சிபிஐ தோற்றவர் 2,98,623 50% 0
    1980
    கருணாநிதி-தாழை திமுக வென்றவர் 2,78,561 51% 10,674
    முருகய்யன் கெ. சிபிஐ தோற்றவர் 2,67,887 49% 0
    1977
    முருகய்யன் எஸ்.ஜி. சிபிஐ வென்றவர் 2,78,419 54% 40,810
    தாழை கருணாநிதி எம் திமுக தோற்றவர் 2,37,609 46% 0
    1971
    எம்.காத்தாமுத்து சிபிஐ வென்றவர் 2,19,684 55% 87,727
    வி. சபாசிவம் என்சிஓ தோற்றவர் 1,31,957 33% 0

     
     
     
    English summary
    Cyclone Gaja.. Relief materials sent from Public to Delta People

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more