நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்குறீங்களா.. எனக்கு ஒரு பிளேட் கொடுங்க பார்ப்போம்.. எடப்பாடி அசத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    நிவாரண முகாம்களை பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கிய முதல்வர்- வீடியோ

    நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண முகாமில் மக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு தரத்தை சரிபார்த்தார்.

    புயலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகப்பட்டினம் வந்தடைந்தார் முதல்வர்.

    நாகையில் நிவாரணம்

    நாகையில் நிவாரணம்

    இன்று காலை நாகப்பட்டினம் நிவாரண முகாமில் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். இதன் பிறகு நாகை மாவட்டத்தின் கோயில்பத்து என்ற ஊரில் சேதமடைந்துள்ள அரசின் உணவு தானியக் கிடங்கை அவர் பார்வையிட்டார்.

    தானிய கிடங்கு

    தானிய கிடங்கு

    மிகப் பெரிய உணவு தானிய கிடங்கான இது கஜா புயல் காரணமாக கடும் சேதத்தை சந்தித்திருந்தது. தானிய கிடங்கை மறுகட்டமைப்பு செய்ய முதல்வர் உத்தரவிட்டார். மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் மாதிரிகளையும் சோதித்து பார்த்து தரமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்தார்.

    உணவு தரம்

    உணவு தரம்

    இதன்பிறகு நாகை மாவட்டம் பி.ஆர்புரத்தில் முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேட்டைக்காரனிருப்பு என்ற பகுதியிலுள்ள நிவாரண முகாமுக்கு சென்ற முதல்வர் அங்கே மக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார்.

    மக்களோடு சாப்பிட்டார்

    மக்களோடு சாப்பிட்டார்

    நிவாரண முகாமில் மக்களோடு அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவையே காணும் சாப்பிட்டார். அப்போது உடன் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் நிவாரண முகாம்களில் உணவை சாப்பிட்டனர்.

    English summary
    Tamil Nadu chief minister Edappadi Palanisamy visited cyclone hit Nagapattinam district on Wednesday and he took his lunch with the people who are affected by the Gaja cyclone and staying in relief centers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X