நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு

Google Oneindia Tamil News

நாகை: நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என சொல்வது போல், நாகை அருகே பணி நேரம் முடிந்த பிறகு ரயிலை இயக்க மாட்டேன் எனக் கூறி பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், காரைக்கால் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, வைத்தீஸ்வரன் கோவில் வந்ததும் ரயில் ஓட்டுநர் முத்துராஜா பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி
திடீரென ரயிலை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

Freight train stopped in mid way Reason To Duty Over Near Nagai

ஏற்கனவே 15 நிமிடம் அதிகமாக வேலை செய்து விட்டதாக கூறிய முத்துராஜ், ரயிலை இயக்க முடியாது என மறுத்துவிட்டார். நிறுத்தப்பட்ட சரக்கு ரயில் புங்கனூர் சாலை வரை நீண்டு இருந்ததால் அங்கிருந்த ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை.

இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மயிலாடுதுறை வரை ரயிலை இயக்குமாறு ரயில்வே நிர்வாகத்தினர் முத்து ராஜாவிடம் கேட்டும் அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனிடையே, ரயில்வே கேட் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த வாகன ஓட்டிகள் சாலை மறியலில் இறங்கினர்.

வயநாட்டில் போட்டிக்கு போட்டி... பிரச்சாரத்தில் குதிக்கின்றனர், பிரியங்கா, ஸ்மிருதி இராணி வயநாட்டில் போட்டிக்கு போட்டி... பிரச்சாரத்தில் குதிக்கின்றனர், பிரியங்கா, ஸ்மிருதி இராணி

நிலைமை மோசமானதிற்கு, பிறகு மனமிறங்கி வந்த முத்துராஜா மயிலாடுதுறை வரை ரயிலை இயக்க ஒப்புக் கொண்டார். ரயில் ஓட்டுனர் முத்துராஜின் செயலால் அவ்வழியே செல்லக்கூடிய ஒரு சில ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு கால தாமதமாக இயக்கப்பட்டன.
ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன ஆளாக இருப்பாரோ

English summary
Freight train stopped in mid way Near Nagai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X