நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    தொலைபேசி சேவை முடங்கியது | மின் கம்பங்கள் சேதம் | பேய்க்காற்று, பலத்த மழை- வீடியோ

    நாகப்பட்டினம்: கஜா புயல் இன்று அதிகாலை, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த நிலையில், அம்மாவட்டத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Gaja updates: Power supply will be restored after 2 days only in Nagapattinam district

    நாகப்பட்டினம் ரயில் நிலையம், புயல் காற்றின் தாக்கத்தால் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. அதன் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. பல இடங்களிலும் மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன.

    Gaja updates: Power supply will be restored after 2 days only in Nagapattinam district

    மரங்கள் விழுந்ததன் காரணமாக மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. புயலின் பாதிப்பு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ள, மின்சார வினியோகம் சீரடைய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

    புயல் தாக்கிய பகுதிகளில் மொத்தம் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Gaja updates: Power supply will be restored after 2 days only in Nagapattinam district

    இரவு பகலாக மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் மின்வாரியத் துறையினர் தெரிவிக்கிறார்கள். இதனிடையே கடும் காற்று காரணமாக கும்பகோணம் அருகே ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் தாரோடு சரிவடைந்தது, விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

    English summary
    Electricity supply will be restored after 2 days only, as cyclone Gaja hit heavily in Nagapattinam district of Tamilnadu. Many electricity poles were damaged and the officials on duty doing the renovation work with war foot manner.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X