நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை.. சூறாவளி காற்றும் வீசுகிறது.. எங்கெல்லாம் மழை?

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை- வீடியோ

    நாகை: நாகை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அத்துடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.

    கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேரம் ஆக ஆக புயலின் வேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    Heavy Rain in Nagappattinam

    இந்நிலையில் நாகப்பட்டினத்தில் புயல் கரையை கடப்பதால் அங்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது புயல் கரையை கடக்க இன்னும் சில மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் நாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வருகிறது.

    கூடவே சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. இது போல் ஆரணி, செய்யார், வந்தவாசி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    Heavy Rain in Nagappattinam

    திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் தூத்துக்குடி வரை கடல் சீற்றமாக உள்ளது. அதுபோல் இந்த புயலால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்றாலும் மெரினா கடற்கரையிலும் மக்களை போலீஸார் வெளியேற்றி வருகின்றனர்.

    English summary
    Heavy rain in Nagappattinam as Gaja is closer to that coastal area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X