நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறந்த நாள் தெரியுமா உங்களுக்கு.. யார் கிட்ட கதை உடறீங்க.. வறுத்தெடுக்கும் கமல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுகவினரை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா மர்மம் குறித்து அதிமுகவினரை வறுத்தெடுத்த கமல்ஹாசன்-வீடியோ

    நாகை: "பிறந்த நாளை விடுங்க.. இறந்த நாள் தெரியுமா உங்களுக்கு? யார் கிட்ட கதை உடறீங்க.. " என்று ஜெயலலிதா மர்மம் குறித்து அதிமுகவினரை கமல்ஹாசன் வறுத்தெடுத்து விட்டார்.

    மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது: "எம்ஜிஆர் போட்ட இலையை இப்போது இருப்பவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அதையும் 2 ஆகபிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    பெரிய தலைவர்

    பெரிய தலைவர்

    வர்ற வழியில பார்த்துக்கிட்டே வந்தேன். வரப்போகும் பிறந்த நாளுக்கான போஸ்டர்கள் இருந்தன. நல்லது. ஒரு பெரிய தலைவர். அவருக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று கொண்டாடுகிறார்கள். கொண்டாடட்டும்.

    கதை உடறீங்களா?

    கதை உடறீங்களா?

    ஆனால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், இறந்த நாள் எது என்று நிச்சயமாக தெரியுமா? எவ்வளவு பெரிய மர்மம், எவ்வளவு பெரிய துரோகம்? யார்கிட்ட கதை உடறீங்க? எல்லாரும் மறந்து போய்டுவாங்கன்னு நினைச்சீங்களா? ஏதோ தெரியாத்தனமான அவசரத்துக்கு கொஞ்சம் தப்பு பண்ணிட்டோம்.

    உணர்வுகள் ஒன்று

    உணர்வுகள் ஒன்று

    அதனால எல்லாருமே அறிவில்லாதவர்கள் என்று எப்படி நீங்க முடிவு பண்ணலாம்? அதை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது, மக்களும் உணர்ந்துவிட்டார்கள். நானும் உணர்ந்துவிட்டேன். என் உணர்வும் மக்கள் உணர்வும் ஒன்று.

    தென்னை மரம்

    தென்னை மரம்

    இங்க நான் காலைல இருந்து சுற்றி சுற்றி வர்றேன். புயல் அடிச்சி எவ்வளோ நாள் ஆகுது. இதுவரைக்கும் தென்னை மரங்கள் சரியாக அகற்றப்படவில்லை. ஆனால், ஒரே ஒரு மரம் மட்டும் தான் அரசால் சரியாக நடப்பட்டுள்ளது. அதுகூட மின்சாரம் செல்லும் எலெக்ட்ரிக்கல் மரம் தான்" என்றார்.

    English summary
    Kamal hasan attack ADMK over Jayalalitha murder issue in Thiruvarur Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X