நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேதாரண்யத்தில் மு.க.ஸ்டாலின்.. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஸ்டாலின்

    நாகை: நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை துறைமுகம் பகுதியிலும் வேதாரண்யத்தில் உள்ள காந்தி நகர் பகுதியிலும் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

    கட்நத 11-ஆம் தேதி வங்கக் கடலில் மையம் கொண்ட கஜா புயல் நேற்று காலை கரையை கடந்தது. அது கடந்த போது டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மழை கொட்டியது.

    MK Stalin reviews Akkaraipettai port

    7 மாவட்டங்களை புரட்டி போட்ட இந்த புயல் தற்போது அரபிக் கடல் வழியாக சென்றாலும் அது விட்டு சென்ற சுவடுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மறுபக்கம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்து முடித்ததாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். தரங்கம்பாடிக்குச் சென்ற அவர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசி குறை கேட்டார். பின்னர் அக்கரைப்பேட்டைக்கு அவர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.

    MK Stalin reviews Akkaraipettai port

    தொடர்ந்து வேதாரண்யம் சென்ற ஸ்டாலின்அங்குள்ள காந்தி நகரில் ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நாகை தவிர புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை ஸ்டாலின் பார்வையிடவுள்ளார் என்று திமுக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மாரடைப்பால் செத்த 50 மான்கள்.. கஜா புயல் கோரத்தின் மறுபக்கம்மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மாரடைப்பால் செத்த 50 மான்கள்.. கஜா புயல் கோரத்தின் மறுபக்கம்

    {document1}

    English summary
    DMK President MK Stalin reviews Akkaraippettai port trust after Gajja hits in Delta districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X