நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த செகன்ட்... "இதுதான் நடக்கும்"... ஸ்டாலின் ஆவேச பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக ஆட்சிக்கு வந்தால் இதான் நடக்கும் - ஸ்டாலின்

    நாகை: திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி அதிமுக அமைச்சர்கள் சிறையில்தான் இருப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    நாகை மாவட்டம் திருக்கடையூரில் நேற்று திமுக நிர்வாகியின் இல்ல விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தேர்தல் வரும் போது தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டிலே உருவாகப் போகிறது என்பது யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

    ஏதோ ஆட்சிக்கு வந்தேதீர வேண்டும் என்பதற்காக நான் சொல்லுகிறேன் என்று எண்ணிவிடக்கூடாது. இன்றைக்கு நாட்டிலே இருக்கக்கூடிய ஆட்சியை பார்க்கிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலைமைகள் என்ன?.

    இது சும்மா டிரெய்லர்தான்... மெயின் பிக்சர பாப்பீங்க.. எல்லாம் அதுக்கான அறிகுறிதான்! இது சும்மா டிரெய்லர்தான்... மெயின் பிக்சர பாப்பீங்க.. எல்லாம் அதுக்கான அறிகுறிதான்!

    உயர்நீதிமன்றமே

    உயர்நீதிமன்றமே

    2 நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது. ஆளுங்கட்சியை சேர்ந்த, 18 சட்டமன்ற உறுப்பினர்களுடைய பதவியை நீக்கியது சரி. நீக்கியது நீக்கியது தான். உடனே அந்த 18 இடங்களுக்கும் தேர்தலை வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என்று ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே, 2 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இப்பொழுது 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றமே தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    இன்றைக்கு காலியாக இருக்கக் கூடிய அந்த 20 தொகுதிகளிலே தேர்தல் நடத்துங்கள் என்று நாம் சொல்லுகிறோம். முதல்வராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லுகிறார் என்று கேட்டால், தேர்தலை சந்திக்கத் தயார் என்று சொல்கிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கூட தைரியம் இல்லாமல் ஒரு ஆட்சியை நீங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். இதைச் சொன்னால் அவர் என்ன சொல்வார் என்று சொன்னால், ‘உள்ளாட்சித் தேர்தலை நடந்தக் கூடாது' என்று தி.மு.க. தான் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றிருக்கிறது என்று ஒரு தவறான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார்.

    நீதிமன்றத்திற்கு சென்றோம்

    நீதிமன்றத்திற்கு சென்றோம்

    நீதிமன்றத்திற்குச் சென்றது உண்மை தான். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தான் நீதிமன்றத்திற்குச் சென்றார். நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலை நிறுத்துங்கள் என்று நாம் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. தேர்தலை முறையாக நடத்துங்கள். விதிமுறைப்படி தேர்தலை நடத்துங்கள் என்று தான் நீதிமன்றத்திற்கு சென்றோம்.

    கட்டுப்பாட்டில்

    கட்டுப்பாட்டில்

    அதனை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பது யார்?. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநில தேர்தல் ஆணையம். மாநில தேர்தல் ஆணையத்தை கண்காணித்துக் கொண்டிருப்பது யார்?. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டிலே தான் இன்றைக்கு இவர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில்

    தமிழகத்தில்

    ஆகவே, அவர்களுடைய கருத்துகளின்படி தான், அவர்களுடைய யோசனையின்படி தான் இங்கு இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தனியாக தன்னிச்சையாகத்தான் செயல்பட வேண்டும் என்பது மரபு. ஆனால், அதையும் மீறி இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக் கூடிய தேர்தல் ஆணையம் முறைப்படுத்தி தேர்தல் நடத்துவதற்குத் தயாராக இல்லை. அதை, முறைப்படுத்திவிட்டால் தேர்தல் நடத்துவதற்கு அவசியம் வந்துவிடும்.

    உருவாக்கம்

    உருவாக்கம்

    தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் தான் இன்றைக்கு. அண்ணா இந்த ஆட்சியை உருவாக்கிய காலத்தில் கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்று சொன்னார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கமிஷன்-கலெக்சன்-கரப்ஷன் என்று உருவாக்கியிருக்கிறார்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி. ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கிற காரணத்தால் தற்காலிகமாக நீங்கள் வெளியிலே நடமாடிக் கொண்டு இருக்கலாம். எப்போது, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி உருவாகிறதோ, அடுத்த நாள் இல்லை, அடுத்த வினாடியே அத்தனை பேரும் சிறைக்கூடத்தில் தான் இருக்கப்போகிறார்கள். இது தான் உண்மை, அவ்வளவு ஆதாரம் இருக்கிறது.

    திமுக கருத்து கணிப்பு

    திமுக கருத்து கணிப்பு

    கருத்துக் கணிப்புகளைப் பற்றிக்கூட எடுத்துச் சொன்னார்கள். கருணாநிதியை பொறுத்த வரையில் கருத்துக் கணிப்பில் என்றைக்கும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது கிடையாது. கருத்துக் கணிப்பு பற்றி என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. அது சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி, அதைப் பற்றி என்றைக்கும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், தி.மு.க.வின் கருத்துக் கணிப்புகளை வைத்துத்தான் தலைவர் கருணாநிதி என்றைக்கும் நடைபோடுவார் என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK President MK Stalin says that ADMK Ministers will be in prison if DMK comes to power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X