நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல் வேகத்தில் கமல்.. கஜா தாக்கிய நாகையில் 2வது சுற்றுப்பயணம்.. மக்களிடம் குறை கேட்கிறார்

நாகையில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் கமல்.

Google Oneindia Tamil News

Recommended Video

    2வது சுற்றுப்பயணம்.. மக்களிடம் குறை கேட்டறிந்த கமல்

    நாகை: புயல் பாதித்த பகுதிகளில் தன் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை கமல் தொடங்கி உள்ளார். அதன்படி நாகை மாவட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

    ஏற்கனவே கஜா புயல் பாதித்த பகுதிகளை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது கஜா புயல் பாதிப்புகளின் கணக்கு விவரம் குறித்து தன்னுடைய மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள்தான் சரியான தகவலை வெளியிட்டனர் என்று சொன்னார். அதோடு மூட்டை மூட்டையாக சாப்பாடு உள்ளிட்ட நிவாரண பொருட்களை அள்ளிக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார்.

    என்ன கொடுமை இது.. புயல் தாக்கி 15 நாளாச்சு.. ஒருவர் கூட எட்டிப் பார்க்காத நரிக்குறவ கிராமம்! என்ன கொடுமை இது.. புயல் தாக்கி 15 நாளாச்சு.. ஒருவர் கூட எட்டிப் பார்க்காத நரிக்குறவ கிராமம்!

    புழுத்துப்போன அரிசி

    புழுத்துப்போன அரிசி

    பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார் கமல். அந்த மாவட்டத்தில் சென்று நேரில் அனைத்தையும் பார்வையிட்ட பிறகு தனது ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், "தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு நல்ல சோறு போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் புழுத்துப்போன அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்" என்று காரசாரமாக பதிவிட்டார்.

    துயர் துடைக்க வேண்டும்

    துயர் துடைக்க வேண்டும்

    அறிவித்திருக்கும் நிவாரண நிதி ரொம்பவும் குறைவு. இப்போது வரை நாம் எல்லாரும் செய்திருப்பது முதலுதவி மட்டும்தான். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரைத் துடைத்திட வேண்டும்" என்றும் கமல் பதிவிட்டிருந்தார்.

    நாகை மாவட்டம்

    நாகை மாவட்டம்

    இந்நிலையில் இரண்டாம் கட்டமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார் கமல். நாகை மாவட்டத்தில் தனது ஆய்வினை துவக்கி உள்ளார்.

    அக்கரைப்பேட்டை

    அக்கரைப்பேட்டை

    முதல்வேலையாக அக்கரைப்பேட்டைக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். நாகை மாவட்டம் முற்றிலுமே சிதைந்து போன மாவட்டமாகி விட்டதால், கமல் அங்கு சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களிடமே நேருக்கு நேராக பேசி குறைகளை கேட்டு வருகிறார்.

    மய்ய உறுப்பினர்கள்

    மய்ய உறுப்பினர்கள்

    இதைதவிர புயலால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் கமல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆய்வு முடித்து விட்ட வந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கமல் சுற்றுப்பயணத்தில் இறங்கி உள்ளதால் மய்ய உறுப்பினர்களும் சுறுசுறுப்பாக நிவாரண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    MNM Kamal Hasan inspects Gaja Cyclone affted place in Nagai District
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X