நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா, அடுத்த சிஎம்முக்கு வண்டி ஓட்டறீங்க.. கலகலவென சிரித்த கமல்!

நாகையில் அரசு பஸ் ஒன்றில் கமல் பயணம் செய்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல்ஹாசன் சாலையோரத்தில் டீ குடித்து அரசு பேருந்தில் பயணம்

    நாகை: "ஆமா... அடுத்த சி.எம்.க்கு வண்டி ஓட்டறீங்க" என்ற வார்த்தைக்கு கமல் உட்பட எல்லோருமே சிரித்த சம்பவம் நாகையில் நடந்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தார்.

    இந்நிலையில், இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக கமல் நாகைக்கு சென்றிருக்கிறார். அங்கு புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்து வருகிறார்.

    நேரில் சந்தித்தார்

    நேரில் சந்தித்தார்

    அதன்படி அக்கரைப்பேட்டைக்கு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை நேருக்கு நேராக சந்தித்து குறைகளை கேட்டார். பிறகு பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள கிராமம் ஒன்றில் இருந்து, வேறு இடத்துக்கு சென்று ஆய்வு செய்ய நேர்ந்தது.

    டிக்கெட் வாங்கினார்

    டிக்கெட் வாங்கினார்

    அதனால் அந்த கிராமத்துக்கு செல்லும் ஒரு அரசு பஸ்ஸில் கமல் ஏறி கொண்டார். பஸ்ஸில் ஏற்கனவே நிறைய பேர் உட்கார்ந்திருந்தனர். தன்னிடமிருந்த காசை கண்டக்டரிடம் கொடுத்து கமல் டிக்கெட் வாங்கினார். பிறகு நேராக டிரைவர் பக்கத்தில் போய் நின்று கொண்டார்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    பஸ் ஓட்டிக் கொண்டே இருந்த டிரைவருக்கு இது ஸ்வீட் ஷாக் ஆகிவிட்டது. அவரிடம் பேச்சு கொடுத்தார் கமல். பதிலுக்கு டிரைவரும் பேசினார். அப்போது டிரைவர் கமலிடம், "சார்.. நீங்க என் வண்டியில வர்றதாலதான் ரொம்ப பாதுகாப்பா வர்றீங்க" என்றார். இதை கேட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

    அடுத்த சி.எம்

    அடுத்த சி.எம்

    அதற்கு ஒரு பயணி டிரைவரிடம், "ஆமா, நீங்க அடுத்த சி.எம்.க்கு வண்டி ஓட்றீங்க" என்றார். இதைக் கேட்டதும் கமல் உட்பட எல்லாருமே சிரித்துவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    MNM Kamal Hasan travelled in Local Govt. Bus in Nagai District
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X