• search
நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"நானும் மனைவியும் கருப்பு.. குழந்தை மட்டும் எப்படி சிவப்பு".. அகிலாவை கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்!

|

நாகை: "நானும் என் பொண்டாட்டியும் கருப்பு.. ஆனா குழந்தை மட்டும் எப்படி சிவப்பா பிறந்தது.. அதான் அகிலாவை கொன்னுட்டேன்" என்று மனைவியை கொன்ற கணவர் பகீர் வாக்குமூலம் தந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் ஐயப்பன்.. 28 வயதாகிறது.. இவர் ஒரு கார் டிரைவர்.

murder: husband killed wife near nagai

இவரது மனைவி அகிலா.. கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகிறது.. ஆனால் 8 வருடமாக அகிலாவை உயிருக்கு உயிராக லவ் பண்ணினார். இப்போது இந்த தம்பதிக்கு 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் இருக்கிறார்கள்.

கல்யாணம் ஆகி தம்பதி சந்தோஷமாகவே வாழ்க்கையை ஆரம்பித்தனர்.. ஆனால் ஐயப்பனுக்கு திடீரென குடிப்பழக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.. இதற்கு பிறகு தானாக சந்தேக புத்தியும் வந்துவிட்டது. தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலே தகராறுதான்.

இந்த சமயத்தில்தான் ஐய்யப்பனுக்கு ஒருபெரிய டவுட் வந்தது.. தானும் கருப்பு, அகிலாவும் கருப்பு.. ஆனால் 2 குழந்தைகள் மட்டும் எப்படி சிவப்பா பிறந்தது என்ற விபரீதமாக தோன்றியது.. இதை வைத்தே அகிலாவுடன் தகராறும் செய்து வந்தார். அகிலாவின் அம்மா வீடு ஒரே தெரு என்பதால், அங்கே அடிக்கடி அழுது கொண்டே போய்விடுவாராம்.. அவர்களும் மகளுக்கு சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைப்பார்களாம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அகிலாவுக்கு திடீர் மயக்கம் வந்துவிட்டது என்று தகவல் வரவும், பதறி கொண்டு ஓடினார்கள்.. மயங்கி விழுந்து கிடந்த அகிலாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்க தூக்கி சென்றனர்.. ஆனால், அகிலா எப்போதோ இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

நெற்றிக்கண்ணுடன் ஜெர்மனியில் குழந்தை பிறந்ததா?.. 17ஆம் நூற்றாண்டு முனிவர் கணித்தாரா?.. உண்மை என்ன?

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், கதறி அழுதனர்.. மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குத்தாலம் போலீசாரிடம் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில், ஐயப்பனை பிடித்து விசாரிக்கவும்தான், மனைவியை அவரே கொன்றுவிட்டதாக தெரிவித்தார்.. கயிறு எடுத்து அகிலாவின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டாராம்.. அப்போது போதையில் இருந்ததாகவும் போலீசாரிடம் ஐயப்பன் தெரிவித்தார்.

குழந்தைகள் சிவப்பாக பிறந்ததால் எனக்கு சந்தேகமே தீரவில்லை.. அதனால்தான் கொன்றேன் என்று வாக்குமூலமும் தந்துள்ளார்.. வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. இப்போது தாய் - தந்தை பேருமே இல்லாமல் அந்த குழந்தைகள் கதறி கொண்டிருக்கின்றன.

பொதுவாக, தாய்-தந்தையின் குணம், நிறம் மட்டுமின்றி, அவர்களது முன்னோர்களின் மரபணுக்களை வைத்துதான் குழந்தைகளின் நிறம் நிர்ணயிக்கப்படுகிறது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.. இருந்தாலும் 8 வருஷம் காதலித்த ஐயப்பனுக்கு, இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்க கூடாது!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
murder: husband killed wife near nagai due to family issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X