• search
நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கதறிய சித்தாள்.. விதவையின் வாயை பொத்தி.. கோயிலுக்குள் தூக்கி சென்று.. கைதான 2 பேர்.. பகீர் பின்னணி

Google Oneindia Tamil News

நாகை: நாகையில் விதவை பெண்ணை, கோயிலுக்கு தூக்கி சென்று சீரழித்த 2 பேர் கைதான சம்பவத்தின் பின்னணி வெளியாகி உள்ளது!

2 நாளைக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. 50 வயது பெண், இரவு நேரம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.. அவரை பூசாரி உட்பட 3 பேர் நாசம் செய்துள்ளனர்.. இறுதியில் ஒரு இரும்பு கம்பியை கொண்டு அவரது பிறப்புறுப்பில் செருகி, வெறி தீர கொன்றும் தீர்த்தனர்.. இந்த சம்பவம் அப்படியே நிர்பயா சம்பவத்தை போலவே உள்ளது என்பதால் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  நாகை: கட்டிட தொழிலாளி.. கூட்டு பாலியல் கொடுமை.. மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்..!

  அத்துடன், ராமராஜ்ஜியத்தை கொண்டு வருவோம் என்ற மண்ணில், கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியையும் தாங்கி வருகிறது.. இதே கேள்விதான் தமிழகத்திலும் எழுந்துள்ளது.. நாளுக்கு நாள் பெண்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே வருகின்றன.. இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால், நிலைமையே வேறு.

  சம்பவம்

  சம்பவம்

  நாகை மாவட்டத்தை சம்பவத்தை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட பெண் ஒரு விதவை.. கணவர் பெயர் வேதையன்.. அவர் இறந்து 8 வருடமாகிறதாம்.. 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.. அவர்களை எப்படி வாழ வைப்பது என்று தெரியாமல் கலங்கி போய், தங்கையின் தயவில் வாழ்ந்து வருகிறார்..

   சரோஜா

  சரோஜா

  நாகை தோப்பு என்ற இடத்தில் தங்கை சரோஜாவும், அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியும் வசித்து வருவதால், அவர்களுடனேயே ஆதரவில் உள்ளார். தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சித்தாள் வேலை பார்த்து வருகிறார். எப்போது வேலைக்கு போகும்சரி, வரும்போதும் சரி, வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் பிள்ளையார் கோயிலில்தான் சாமி கும்பிட்டுவிட்டு செல்வாராம்.

   பிள்ளையார் கோயில்

  பிள்ளையார் கோயில்

  வேலை முடிந்து கூலியை வாங்கி கொண்டு திரும்பி வர லேட்டானாலும் சரி, கோயிலுக்கு போய் சாமிகும்பிட்டு விட்டுதான் போவாராம்.. அப்படித்தான் கடந்த 6 -ம் தேதி இரவு 9 மணிக்கு கோயிலுக்கு வந்துள்ளார்.. திடீரென வந்த 2 பேர் அப்படியே சித்தாளின் வாயை பொத்தி கோயிலுக்கு உள்ளேயே தூக்கி கொண்டு போய்விட்டனர்.. பிறகு மாறி மாறி சித்தாளை நாசம் செய்துள்ளனர்... நடந்ததை வெளியே சொன்னால், உன் வீட்டுக்கே வந்து உன்னுடைய 2 பெண்களையும் உன்னை செய்ததுபோலவே நாசம் செய்திடுவோம் என்று அந்த இளைஞர்கள் மிரட்டி உள்ளனர்.

   அலறல்

  அலறல்

  இரவு 2 மணி இருக்கும்.. தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.. அக்காவை பார்த்ததுமே சரோஜா அலறி துடித்துள்ளார்.. நடந்தது என்ன என்று அறிந்த சரோஜாவின் கணவர், சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டார்.. ஆனந்தராஜ் 25, அருள்ராஜ் 25, இந்த 2 பேர்தான் அவர்கள் என்று உறுதியானபிறகு, பஞ்சாயத்தாரிடம் சென்று புகார் சொல்லி இருக்கிறார்.. ஆனால், அவர்கள் இந்த புகாரை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை என்கிறார்கள்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அருள்ராஜ், விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

   கைது

  கைது

  இவ்வளவும் நடந்த பிறகு நேற்றுதான் அதாவது 7-ம்தேதிதான் போலீசில் வந்து புகார் தந்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.. கோயிலுக்கு போன பெண்ணுக்கு, அதுவும் ஒரு விதவைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ஆச்சரியம், அதிர்ச்சியில் தமிழக மக்கள் உறைந்து போய் உள்ளனர்!

  English summary
  Nagai Youngsters arrested for sexually abusing a widow inside a temple
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X