நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா சேதத்திலிருந்து மீளாத சோகம்.. தவணை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல்.. விவசாயி தற்கொலை முயற்சி!

Google Oneindia Tamil News

வேதாரண்யம்: கடன் தவணையை கட்ட தவறிய விவசாயிடமிருந்து டிராக்டரை தனியார் நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்ததை கண்டித்து விவசாயி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். விவசாயியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Nagappattinam farmer commits suicide attempt after his tractor seized by officials

இவர் தனது விவசாய பயன்பாட்டுக்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோழமண்டலம் நிதி நிறுவனத்தில் ரூ 4 லட்சத்து 9 ஆயிரம் கடன் பெற்று டிராக்டர் ஒன்று வாங்கினார்.

இதற்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ 35,815 தவணை செலுத்த வேண்டும்.

3 தவணை செலுத்தி விட்ட நிலையில், கடந்த 20-ம் தேதி நான்காவது தவணை செலுத்த வேண்டும். இந்த நிலையில் செந்தில்நாதன் கஜா புயலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பணத்தை திருப்பி செலுத்தவில்லை.

இதனால் செந்தில்நாதனை தொடர்பு கொண்ட நிதி நிறுவன ஊழியர்கள், தங்களது டிராக்டரை பதிவு செய்ய வேண்டுமென கூறி டிராக்டரை நாகையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்து வரும்படி கூறினர்.

அதனை நம்பி, ஆர்டிஓ அலுவலகத்துக்கு டிராக்டரில் வந்து பதிவு செய்துவிட்டு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நிதி நிறுவன ஊழியர்கள் செந்தில்நாதனை மிரட்டி பாதி வழியிலேயே இறக்கிவிட்டு டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

இதனால் மனமுடைந்த செந்தில்நாதன், நடந்த விவரத்தை தனது மனைவிக்கு கடிதமாக எழுதி வைத்துவிட்டு வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பின்னர் மயங்கிய நிலையில் இருந்த செந்தில்நாதனை அவரது குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Nagappattinam farmer commits suicide attempt after his tractor seized by private finance institutions for not repaying the due amount.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X