நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா எதிரொலி: 463 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்பட்ட நாகூர் தர்கா

Google Oneindia Tamil News

நாகப்பட்டினம் : கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்கா 463 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை மாலை மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பக்தா்களின் வருகையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

 Nagoor Darga closed for first time in 463 years of history

இதன்படி, நாகையை அடுத்த நாகூரில் உள்ள உலக புகழ்ப் பெற்ற தா்காக்களுள் ஒன்றான நாகூா் பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்காவில் பக்தா்களின் வருகைக்கு வெள்ளிக்கிழமை முதல் தடைவிதித்து, தா்கா நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாா்ச் 31 -ஆம் தேதி வரை நாகூா் தா்காவில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனவும், பொதுமக்கள் அனைவரும் அரசுக்கும், நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்குமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்பு பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய திருமலை ஏழுமலையான் கோவில்கொரோனா பாதிப்பு பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய திருமலை ஏழுமலையான் கோவில்

இந்த அறிவிப்பு, நாகூா் தா்காவின் பிரதான வாயில் பகுதியில் ஒட்டப்பட்டது. பின்னா், தா்காவில் தங்கியிருந்த அனைத்து பக்தா்களும் வெள்ளிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டு, தா்காவின் தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், கிழக்கு வாசல் ஆகிய வாசல் கதவுகள் அடைக்கப்பட்டன.

நாகூா் ஆண்டவா் தா்காவின் 463 ஆண்டு கால வரலாற்றில் பக்தா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்டது இதுவே முதல்முறை எனப்படுகிறது.

English summary
Nagoor Darga closed for first time in 463 years of history as Corona virus intensifies in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X