நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகையில் களமிறங்கியது கடற்படை.. மீட்புப் பணிகள் தீவிரமடைகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    இழுத்து போட்டு வேலை செய்யும் நல்லுள்ளம்-வீடியோ

    நாகை: கஜா புயலால் கடும் பாதிப்படைந்துள்ள நாகை மாவட்டத்தில் தற்போது கடற்படையும் மீட்புப் பணிகளில் களம் இறக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சரிவர போய்ச் சேராத நிலையே காணப்படுகிறது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு வகையிலும் மீட்புப் பணிகளை முடுக்கி விட ஆரம்பித்துள்ளது அரசு நிர்வாகம்.

    தற்போது தமிழக காவல்துறை, வருவாய்த்துறையினர், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் படை உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாக தற்போது கடற்படையும் இணைந்துள்ளது.

    கஜாவை விட தீவிரம் காட்டும் முருகன்.. சோர்வு இல்லாமல் மின் இணைப்புகளை சரி செய்யும் சூப்பர் ஹீரோ! கஜாவை விட தீவிரம் காட்டும் முருகன்.. சோர்வு இல்லாமல் மின் இணைப்புகளை சரி செய்யும் சூப்பர் ஹீரோ!

    மீட்புப் பணியில் கடற்படை

    நாகை மாவட்டத்தில் கட்டட இடிபாடுகளை அகற்றுவது, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் கடற்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பொதுமக்களும் இணைந்து செயல்படுகின்றனர். மேலும் இன்று காலை காரைக்காலுக்கு இந்திய கடற்படையின் சேட்லட் மற்றும் செரியம் ஆகிய இரு கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் வந்து சேர்ந்துள்ளன.

    ராமதாஸ் கோரிக்கை

    வேதாரண்யம் பகுதிகளில் நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படாததால் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உடலாலும், மனதாலும் தளர்ந்து போயிருக்கும் மக்களை பட்டினியில் வாட விடக்கூடாது. மக்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நேரில் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்

    புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், அக்கரைப்பேட்டை மற்றும் அருகாமை கிராமங்களுக்கு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

    சீரமைக்கப்படும் பள்ளிகள்

    புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசித்து சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைன் கூறியுள்ளார்.

    களத்தில் நாம் தமிழர்

    நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான ஒரு பதிவு.
    காரைக்காலில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பணியில் #நாம்தமிழர்கட்சி யினர்

    இயற்கையின் முன்பு அனைவரும் சமம்

    இயற்கைக்கு முன்பு அனைவருமே சமம் என்பதை இந்த புயல் எடுத்துக் காட்டியுள்ளது.

    மன்னார்குடியில் டிஆர்பி ராஜா களப்பணி

    மன்னார்குடியில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா வெள்ள நிவாரணப் பணிகளை நேரில் சென்று பார்த்து முடுக்கி விட்டு வரும் காட்சி.

    English summary
    Navy men are involved in Gaja relief works in Nagapattinam since morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X