நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருமாவளவனுக்கு அவங்க பதிலடி கொடுக்காவிட்டாலும், மக்கள் கொடுப்பாங்க.. காயத்ரி ரகுராம்

Google Oneindia Tamil News

நாகப்படடினம்: இந்து கடவுளை தொடர்ந்து விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்க என பாஜக மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கடலூர்: தமிழ்நாட்டில் வாழ தகுதியற்றவர் திருமா.. காயத்ரி ரகுராம் கடும் விமர்சனம்..!

    திருமாவளவனுக்கு அரசு பதிலடி கொடுக்கவில்லை என்றாலும், தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார். திமுகவை குடும்ப அரசியல் கட்சி என்றும் விமர்சித்தார்.

    நாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' இன்று கொண்டாடப்பட்டது. அவுரித்திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பாஜக மகளிர் அணியினர் கலந்துகொண்டு கரும்பு மஞ்சள் புத்தரிசி இட்டு பொங்கலிட்டனர்.

    முக்கியமான பொங்கல்

    முக்கியமான பொங்கல்

    நிகழ்ச்சியில், மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கலந்துகொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், தமிழக விவசாயிகளுக்கு இவ்வாண்டு மிக முக்கியமான பொங்கல். விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைத்த பொங்கல் என்று நான் சொல்வேன். ஏனெனில் விவசாயி பொருட்களுக்கு அவர்களே இப்போது விலை வைக்க முடியும்.

    குறைந்த பட்ச ஆதார விலை

    குறைந்த பட்ச ஆதார விலை

    அதுமட்டுமின்றி, குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள். இனி இடைத்தரகர்களே கிடையாது. இந்த மாதிரி ஒரு சுதந்திரம் கிடையாது. நம்ம விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்காக 96 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். தமிழகத்திற்கு மட்டும் 5.5 லட்சம் கோடி கொடுத்துள்ளார்கள். எந்த பிரதமரும் இதை செய்தது கிடையாது. திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டுசேர்க்கிறார் பிரதமர் மோடி.

    இந்து கடவுள்

    இந்து கடவுள்

    இந்து கடவுளை தொடர்ந்து விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் திருமாவளவனுக்கு அரசு பதிலடி கொடுக்கவில்லை என்றாலும், தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.

    குடும்ப அரசியல்

    குடும்ப அரசியல்

    திமுகவை வெறுத்து பலர் பாஜகவுக்கு வருகிறார்கள். திமுக என்பது குடும்ப அரசியல் என்றும் தாத்தாவுக்கு பின் மகன். மகனுக்கு பின் பேரன் என மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டதால் தான் தற்போது திமுகவை விட்டு அனைவரும் பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

    English summary
    Gayatri Raghuram, BJP state arts and culture wing chief said that People will retaliate against Thirumavalavan for criticizing Hindu Gods.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X