நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை தாக்கிய கிராம மக்கள்-வீடியோ

    நாகை: கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட நாகப்பட்டினத்துக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை அரிவாளுடன் தாக்கியதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் கடும் சேதாரம் ஏற்பட்டது.

    கொந்தளிப்பு

    கொந்தளிப்பு

    இதையடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 18-ஆம் தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக நிர்வாகிகளுடன் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார். இந்த நிலையில் மக்கள் நிவாரண பணிகள் கிடைக்காததாலும் அரசு அதிகாரிகள் யாரும் சில பகுதிகளை பார்வையிடாததாலும் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

    ரிவர்ஸ் கியர்

    ரிவர்ஸ் கியர்

    இதனால் விழுந்தமாவடி கன்னித்தோப்புப் பகுதியில் அமைச்சர் ஓ.எஸ் மணியனின் காரை அரிவாளால் தாக்கினர். இதையடுத்து அவரது கார் போலீஸாரின் அறிவுரைக்கேற்ப ரிவர்ஸ் கியரில் இயக்கப்பட்டு சென்றது.

    விசாரணை

    விசாரணை

    இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    அரிவாளால் தாக்கிய 6 பேர் கைது

    அரிவாளால் தாக்கிய 6 பேர் கைது

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை நாகை மவட்ட காவல்துறையினர் நேற்று முன் தினம் கைது செய்தனர். நேற்று மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    English summary
    Police arrested 6 people after Minister O.S.Manian's car while he has gone to Gaja affected places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X