நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாகை.. திருவள்ளூரில் இன்றைக்கு அதிகம்.. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

நாகை.. திருவள்ளூரில் இன்றைக்கு அதிகம்.. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா

Recommended Video

    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் லாக்டவுன் தளர்வு செல்லாது

    சென்னை: தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் 214 பேருக்கும் கோவையில் 126 பேருக்கும், திருப்பூரில் 79 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும் திண்டுக்கல்லில் 70 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூர், நாகப்பட்டினத்தில் தலா 7 பேருக்கும் , ஈரோட்டில் 6 பேருக்கும் சென்னையில் 5 பேருக்கும், செங்கல்பட்டு சேலத்தில் தலா 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் 2 பேருக்கும், திருநெல்வேலி, தேனி, தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்.. எந்தெந்த பகுதிகள்?.. மத்திய அரசின் லிஸ்ட் இதோ! தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்.. எந்தெந்த பகுதிகள்?.. மத்திய அரசின் லிஸ்ட் இதோ!

    கோவை நிலவரம்

    கோவை நிலவரம்

    சென்னையில் 214 பேருக்கும், கோவை மாவட்டத்தில், 126 பேருக்கும், திருப்பூரில் 79 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கும், திருநெல்வேலியில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 43 பேருக்கும், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கரூரில் 41 பேர்

    கரூரில் 41 பேர்

    கரூர் மாவட்டத்தில் 41 பேருக்கும், தேனி மாவட்டத்தில் 41 பேருக்கும் , மதுரை மாவட்டத்தில் 41 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 38 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 20 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

    விருதுநகர் 17 பேர்

    விருதுநகர் 17 பேர்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 பேருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டங்களில் 16 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கும் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் 8 பேர்

    காஞ்சிபுரம் 8 பேர்

    சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 9 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் ருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் ஆகும்.

    English summary
    Tamil Nadu district wide COVID 19 cases on 15.4. 2019, detailed report, 38new cases reported in last 24 hours at tamil nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X