நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஊராட்சி உள்ளாட்சி தேர்தல்களில் தங்களுக்கும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.

திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா என கோட்டை கட்டி ஆண்ட இடதுசாரிகள் தங்களது பலத்தை இழந்துவிட்டனர். கேரளாவில் மட்டுமே இடதுசாரிகள் செல்வாக்கு இருக்கிறது.

Tamilnadu Local Body Elections: Left Parties get 87 Union Council Members

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடதுசாரிகள் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தின. திமுக தலைமையிலான கூட்டணியால்தான் இந்த வெற்றி சாத்தியமானதாக கூறப்பட்டது.

தற்போதைய உள்ளாட்சி தேர்தலிலும் இடதுசாரிகள் தங்களுக்கும் செல்வாக்கு இன்னமும் தமிழகத்தில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளில் 87 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள்! கொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள்!

இதில் சிபிஐ 60; சிபிஎம் 27 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் சிபிஐ 7; சிபிஎம் 1 இடத்தையும் கைப்பற்ற்யுள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸுக்கு அடுத்து 4-வது இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) பெற்றிருக்கிறது.

English summary
In Tamilnadu Local Body Elections, Left Parties got 87 Union Council Members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X