நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழை பிள்ளைகளுக்கு எட்டாகனியாகும் ஆன்லைன் வகுப்புகள்... இலவச ஸ்மார்ட் போன் தருக -தமிமுன் அன்சாரி

Google Oneindia Tamil News

நாகை: கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு விலையில்லா செல்போன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

எளிய குடும்பத்து பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எட்டாகனியாக உள்ளதால் அரசு இதை கவனத்தில் கொண்டு இலவச ஸ்மார்ட் போன் விநியோகிக்க முன் வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

thamimun ansari demands, tn govt should provide free smart phones to students

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''கொரோனா தொற்று காரணமாக இக்கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.அதனால் பள்ளிக்கூட வகுப்புகள் தற்போது இணையம் வழியாக (online) நடைப்பெற்று வருகின்றது.இந்த வழிமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை எளிய குடும்பத்து பிள்ளைகள் பெற முடியாத சூழல் பரவலாக உள்ளது.

கனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி!கனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி!

இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, 6 மாதங்களுக்கு இலவச இணைய வசதியுடன் கூடிய திறன் பேசிகளை (Smartphone) விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது பஞ்சாப் மாநில அரசு மாணவர்களுக்கு, இவ்வகை திறன்பேசி (Smartphone) எனப்படும் அலைபேசிகளை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதை முன்மாதிரியாக கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்''. இவ்வாறு தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
thamimun ansari demands, tn govt should provide free smart phones to students
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X