நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த தேர்தலுடன் திமுக-வின் சகாப்தம் முடிந்து விடும்… முதல்வர் பழனிசாமி பேச்சு

Google Oneindia Tamil News

தஞ்சை: நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் திமுகவின் சகாப்தம் முடிந்து விடும் என்று முதலமைச்சர் பழனிசாமி ஆரூடம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணிக்கு ஆதரவாக கும்பகோணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது, பேசிய அவர், மத்தியில் நிலையான ஆட்சி அமைய பிரதமாக மீண்டும் மோடியே வர வேண்டும் என்றார்.

The DMK’s Era will end with this election Says Chief Minister Palanisamy

எதிர்க்கட்சியாக இருக்கும்போதே திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, இந்த தேர்தலுடன் திமுகவின் சகாப்தம் முடிந்து விடும் என தெரிவித்தார்.

மேலும், மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும்; திறமையான பிரதமர் தேவை என்பதற்காக நடக்கின்ற தேர்தல் இது என்றும், துரோகிகளால் தமிழகத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் அதிமுக கூட்டணி கொள்கை கூட்டணி எனவும் பேசினார். தேர்தல் முடிந்தவுடன் ஏழை குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

கஜா புயல் பாதித்த கிராமங்களில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

முன்னதாக, திமுகவினர் செய்த தவறுகள் அனைத்தும் ஆதாரத்துடன் உள்ளது என்றும், தேர்தல் முடிந்தவுடன் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

English summary
LokSabha Elections 2019: Chief Minister Palanisamy Said That The DMK’s Era will end with this election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X