நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை?... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்

Google Oneindia Tamil News

நாகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே பிரச்சனைகள் ஏதுமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக-விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்த காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

There was no problem between Chief Minister edappadi palanisamy and O.Panneerselvam Says Minister Kamaraj

அப்போது அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தல் முடிவை அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதற்காகவே, வழங்கப்பட்ட முடிவாக பார்க்கிறோம். மேலும் மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைவது மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக ஆட்சி அமையும் என மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரம் செய்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது அதில் தோல்வியை சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதலமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம் என்றார்.

இந்த பக்கம் வந்தீங்க.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க.. காளியம்மாள் ஆவேசம்! இந்த பக்கம் வந்தீங்க.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க.. காளியம்மாள் ஆவேசம்!

தற்போது வரை தமிழகம் முழுவதும் 1 கோடியே 99 இலட்சத்து 48 ஆயிரத்து 865 ஸ்மார்ட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 2,63,432 ஸ்மார்ட் கார்டுகள் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகள் அமல் காரணமாக குடும்ப அட்டை வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது 1,96,181 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவைகள் அச்சடிக்கும் பணியும் துவங்கப்பட்டுவிட்டதாகவும் அவைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவர்கள் இருவரும் இணைந்த கைகளாக இந்த ஆட்சியை வழி நடத்தி செல்வதாகவும், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, மோடி தலைமையிலான அமைச்சரவையில், அ.தி.மு.கவிற்கு வழங்கப்பட இருந்த ஒரு அமைச்சர் பதவியும் யாருக்கும் கிடைக்காமல் போனதிற்கு உட்கட்சி பூசல் என சொல்லப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் செயலால், அக்கட்சியிலுள்ள முன்னணி நிர்வாகிகள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்களாம். இவ்விவகாரம் அ.தி.மு.கவில் பெரிய புகைச்சலை ஏற்படுத்தும் நிலையில், விவகாரம் பெரிதாகி இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Minister Kamaraj said that there was no problem between Chief Minister edappadi palanisamy and O.Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X