நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை

ஆறாம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்கட்டணத்தை கட்ட முடியாத வேதனையில் மனைவி, மகனோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நாகப்பட்டிணம்: படித்து போலீஸ் ஆக நினைத்த சிறுவனின் கனவு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் சிதைந்து போனது. மகனின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் நகை தொழிலாளி ஒருவர் குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரசு பள்ளிகளில் இலவமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அளிக்கப்படுகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. அதிக பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளையால் பல பெற்றோர்கள் கடன் வாங்குகின்றனர்.

அம்மாக்கள் நகைகளை அடகு வைக்கின்றனர். அப்பாக்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்குகின்றனர். அதுவும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்காவிட்டால் உலகமே வெறுத்து போகிறது. கடைசியில் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

நெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை நெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை

நாகை நகை தொழிலாளி

நாகை நகை தொழிலாளி

குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொண்ட நகைத்தொழிலாளியின் பெயர் செந்தில்குமார் என்பதாகும். 35 வயதாகும் இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் ஜெகதீஸ்வரன் என்ற மகனும் இருந்தனர். ஆறாம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ்வரனுக்கு காவல்துறையில் வேலை செய்ய வேண்டும் என்பது கனவு.

கல்விக்கட்டணம்

கல்விக்கட்டணம்

மகனின் கனவை நிறைவேற்ற தனியார் பள்ளியில் சக்தியை மீறி சேர்த்து விட்டார் செந்தில்குமார். நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சில லட்சங்கள் கடனும் இருந்தது. இருந்தாலும் மகனின் ஆசைக்காக தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கட்டணம் கட்ட முடியாமல் தவித்தார் செந்தில்குமார்.

நெருக்கடியில் தவிப்பு

நெருக்கடியில் தவிப்பு

பள்ளிக்கட்டணம் கட்டினால் மட்டுமே பாடப்புத்தககங்கள், நோட்டுப்புத்தகங்கள் தரப்படும் என்று மாணவன் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. உடனடியாக கல்விக்கட்டணத்தை கட்டவும் கூறினர். இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடன் ஸ்கூல் பீஸ் கட்டுங்க என்று பெற்றோர்களை நச்சரிக்க ஆரம்பித்தான் ஜெகதீஸ்வரன்.

கடன் நெருக்கடி

கடன் நெருக்கடி

நகை தொழிலில் நஷ்டம் ஒருபக்கம், கடன் நெருக்கடி மறுபக்கம் என தவித்து வந்தார் செந்தில்குமார். மகனின் படிப்பிற்காக கடன் கேட்டும் யாரும் தரமுன்வரவில்லை. ஒரே மகனின் ஆசையை கூட நிறைவேற்ற முடியலையே என்று வேதனைப்பட்டார். தனது மனைவியிடமும் இதனை கூறி கவலைப்பட்டார்.

விஷம் குடித்த குடும்பம்

விஷம் குடித்த குடும்பம்

படித்து போலீஸ் ஆக நினைத்த மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத வேதனை, கல்விக்கட்டணம் கட்டமுடியாத தாங்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மதிய உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு மூவரும் உயிரை மாய்த்துக்கொண்டனர். செந்தில்குமாரின் கடை உரிமையாளர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மூவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு என்ன செய்ய வேண்டும்

அரசு என்ன செய்ய வேண்டும்

அரசு பள்ளிகளில் கட்டணம் எதுவும் இன்றி இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அரசு ஆசிரியர்கள் அனுபவசாலிகள், கல்வி கற்பிக்கும் திறனும் அதிகம் கொண்டவர்கள். ஏழை மாணவர்களுக்காகவே இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் படித்து அரசு வேலைக்கு சென்றவர்கள் பலர் உள்ளனர். இந்த விழிப்புணர்வு பல பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. இதனை உணர்ந்தால் தனியார் பள்ளிகளில் அதிகம் கட்டணம் செலுத்தி படிக்க வைக்க ஆசைப்பட மாட்டார்கள். மாணவர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.

English summary
P Senthil Kumar a goldsmith involved in a small time jewel-making business at Bazaar Road, was residing at Sivan Street in Velipalayam in Nagapattinam along with wife Lakshmi and Jagadeesh. The couple attempted to borrow money for paying the school fee but failed in their attempt, and the disappointed duo subsequently decided to end their lives. Consuming poison according to plan, the trio ended their lives on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X