• search
நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வேதரத்தினத்தை இழுத்த திமுக.. ஜீவஜோதியை கையில் எடுக்கும் பாஜக.. அடுத்து என்னவெல்லாம் ஆகுமோ?!

|

நாகை: "என்னங்க சொல்றீங்க.. ஜீவஜோதியெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.. நீங்க வேணும்னா பார்த்துட்டே இருங்க, வேதாரண்யத்தை வேதரத்தினம்தான் தட்டி கொண்டு போக போகிறார்" என்கிறார்கள் திமுகவினர்! இதற்கு காரணம், சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஜீவஜோதியை வைத்து காய் நகர்த்த தொடங்கி உள்ளது பாஜக!

  BJP-உடன் AIADMK சேர்ந்தால் அவ்வளவு தான்-Mohan Kumaramangalam | Oneindia Tamil

  நாகை மாவட்டம் வேதாரண்யம் என்றாலே ரொம்ப வருஷமாகவே டக்கென கண்முன்னாடி வந்து நிற்பவர் வேதரத்தினம்.. திமுகவில் முக்கிய அடையாளமாக திகழ்கிறார்.. 1996, 2001, 2006 என்ற 3 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து ஜெயித்தவர்.

  வேதாரண்யம் தொகுதியை திமுகவின் கோட்டையாகவே மாற்றி வைத்திருந்தார் வேதரத்தினம்... தொடர்ந்து கட்சியில் வேதரத்தினத்தின் செல்வாக்கு கடகடவென உயர்ந்தது. இது அப்போதைய நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏகேஎஸ் விஜயனுக்கு எரிச்சலை தந்தது.. அவர் தந்த பிரஷர் காரணமாக, கடுப்பாகி, திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

  தமிழக மின்வாரியத்துக்கு கடன்...விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகுமா!!

   ஆதரவாளர்கள்

  ஆதரவாளர்கள்

  இவரிடம் ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், ரொம்ப எளிமையானவர்.. யார் என்ன உதவி கேட்டாலும் ஓடோடி வருவார்.. யார் வேண்டுமானாலும் இவரை எளிதாக அணுகலாம்.. கொஞ்சமும் பந்தா இருக்காது.. அதனால்தான், அன்றைய தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசனையும், அதிமுகவின் ஓஎஸ் மணியனையும் அசால்ட்டாக சாய்க்க முடிந்தது.

  திமுக

  திமுக

  கட்சிக்கு அப்பாற்பட்டு தன்னுடைய செல்வாக்கை தொகுதியில் வளர்த்து வைத்துள்ளதே மிகப்பெரிய பலமாக இவருக்கு உள்ளது.. அதனால் திமுகவில் இருந்தாலும், பாஜகவில் இருந்தாலும் வேதரத்தினம் அந்த தொகுதி மக்களின் நாயகனாகவே திகழ்ந்து வருகிறார்..

  வேதாரண்யம்

  வேதாரண்யம்

  அவ்வளவு ஏன், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 3 இடங்களில் மோடி பிரச்சாரம் செய்ய வந்தபோது, இருக்கிற தொகுதியெல்லாம் விட்டுவிட்டு, வேதாரண்யத்துக்கு சென்றதற்கு காரணம், வேதரத்தினத்தின் மாஸ் டெல்லி வரை பேசப்பட்டதுதான்.. இந்த அளவுக்கு பாஜகவில் செல்வாக்கு உயர்ந்த நிலையில், எப்படியும் பெரிய பொறுப்பு, பதவி தனக்கு வரும் என்று ரொம்பவும் ஆசையுடன் காத்திருந்தார்.. ஆனால் வெளியான நிர்வாகிகள் பட்டியலில் வேதரத்தினம் பெயர் மிஸ்ஸிங்!

   விபி துரைசாமி

  விபி துரைசாமி

  இதனால் உச்சக்கட்ட வெறுப்புக்கு போய்விட்டார்.. அந்த சமயம் பார்த்து திரும்பவும் அழைத்து கொண்டுவிட்டது திமுக.. அதாவது, திமுகவில் இருந்து விபி துரைசாமி பாஜக பக்கம் சென்றார் என்றால், அங்கிருந்து வேதரத்தினம் திமுகவுக்கு வந்து சேர்ந்தார்... வழக்கம்போலவே வேதாரண்யத்தை வலுவாக்கி தன்னிடத்தில் கெட்டியாக பிடித்து வைத்துள்ளார்.

   ஜீவஜோதி

  ஜீவஜோதி

  இந்த சமயத்தில்தான்தான் ஜீவஜோதி தொகுதியில் என்ட்ரி ஆகிறார்.. சமீபத்தில்தான் இவர் பாஜகவில் சேர்ந்தார்.. அரசியல் பின்புலம் இல்லை.. போராட்டம், ஆர்ப்பாட்டம் எதுவும் செய்ததில்லை... தனித்திறமை, முத்திரை, களப்பணி, மக்கள் பணி இப்படியும் எதுவும் ஜீவஜோதி செய்ததில்லை.. ஆனால், தமிழகம் நன்கு அறிந்த முகம்.. பரிச்சயப்பட்ட, பழக்கப்பட்ட முகம்.. கருப்பு முருகானந்தத்தின் ஆதரவாளர் என்ற ஒரே பின்னணியில் பாஜகவுக்கு வந்துள்ளார்.

   புதிய நியமனம்

  புதிய நியமனம்

  இந்நிலையில், ஜீவஜோதிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எதற்காக இவ்வளவு பெரிய பொறுப்பை எடுத்து ஜீவஜோதிக்கு தந்தார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், வேதரத்தினத்திற்கு போட்டியாக களம் இறக்கவே இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

  திமுக

  திமுக

  ஏற்கனவே ஒருமுறை வேதரத்தினத்துக்கு முக்கியத்துவம் தராமல் போனதால்தான் அவர் பாஜக பக்கம் போனார்.. இனி திமுக அப்படி ஒரு தவறை செய்யாது என்றே தெரிகிறது.. தேர்தலும் கூடிய சீக்கரம் வர போவதால், வேதாரண்யம் தொகுதியை லட்டு மாதிரி அள்ளி கொள்ளவே பிளான் போடும்.. அதனாலேயே வேதரத்தினத்துக்கு தேர்தலில் வாய்ப்பு தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

   அசைக்க முடியாது

  அசைக்க முடியாது

  ஜீவஜோதி பற்றி வேதரத்தினம் ஆதரவாளர்கள் சொல்லும்போது,"வேதரத்தினத்தை யாராலும் அசைக்க முடியாது.. ஜீவஜோதியெல்லாம் எங்களுக்குப் பொருட்டே கிடையாது'' என்கிறார்கள்... உண்மையிலேயே, திமுகவின் வேதரத்தினம் வெல்வாரா? அல்லது ஜீவஜோதி வேதரத்தினத்தை சாய்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

   
   
   
  English summary
  whats the reason behind in, jeeva jothi bjp tanjore south district vice president
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X