நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரீவைண்ட் 2020... தந்தை சீரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன்.. நாகப்பட்டினம் டாப் 10!

Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்; 2021 புதுவருடம் வர பிறக்க உள்ள நிலையில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம். நாகப்பட்டினத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற பிரமாண்ட அனைத்து கட்சி பேரணி முதல் இடத்தில் உள்ளது

Recommended Video

    ரீவைண்ட் 2020... நாகப்பட்டினம் டாப் 10..!

    மிக நீண்ட தேசிய கொடியை பதாகை போல் பிடித்தபடி ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் இமாம் நிஜமுதீன், எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, நாகை எம்.பி. எம். செல்வராஜ்,. கீழ்வேளூர் எம்.எல்.ஏ. மதிவாணன், மற்றும் அ.மு.மு.க , வி.சி.க , சிஎபிம், மக்கள் நீதி மையம், எஸ்பிடிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர். அரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு 2ஆம் இடத்தில் உள்ளது.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து 16 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர் அதில் அதிமுக கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஒன்றியக் குழு தலைவராக இவர் வெற்றி பெற்ற நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் ஒரு மனுவை அளித்தார். அதில் ஒன்றியக் குழு தலைவருக்கு அரசு வழங்கும் வாகனம், அதற்கான எரிப்பொருள் செலவு, வீட்டிற்கு வழங்கப்படும் தொலைபேசி இணைப்பு, இன்ன பிற சலுகைகள் தேவையில்லை. பயணப்படி, அமர்வுபடி தொகையை திட்டச்சேரியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு மையத்திற்கு நேரடியாக வழங்க வேண்டும் என்று கூறி வியப்பில் ஆழ்த்தினார்

    தந்தை சீரழித்த காதலி

    தந்தை சீரழித்த காதலி

    தந்தையால் சீரழிக்கப்பட்ட காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன் 3ஆம் இடத்தில் உள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது செம்போடை என்ற கிராமத்தில் கருப்பு நித்யானந்தம் என்ற கொடூரன் மகன் காதலித்த பெண்ணை தைரியமாக என்னுடன் வா நான் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என சொல்லி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை கேள்விப்பட்டு கொதித்துபோன மகன் முகேஷ் தனது காதலில் உருதியாக நின்று பெற்ற தந்தையே தன் காதலியை நாசம் செய்த பிறகும் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊர் மக்கள் ஆசீர்வாதத்துடன் கல்யாணம் செய்தார்.அவருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    வயலில் இறங்கிய முதல்வர்

    வயலில் இறங்கிய முதல்வர்

    நாகையில் வயலில் இறங்கி.. வேட்டியை மடித்துக் கட்டி.. நாற்று நட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4ஆம் இடத்தில் உள்ளார். நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைப்பதற்காக நீடாமங்கலம் வழியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நீடாமங்கலத்தை அடுத்த கொண்டையாறு கிராமத்தில் வயலில் இறங்கி பெண்கள் நாற்று நட்டு கொண்டிருந்தனர். அதை பார்த்த முதல்வர் காரை நிறுத்த சொன்னார். பின்னர் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு வயலில் இறங்கினார். பெண்களிடம் இருந்து நாற்றை வாங்கி நாற்று நடத் தொடங்கினார். இதை பார்த்த அங்கிருந்த விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மூடப்பட்ட தர்கா

    மூடப்பட்ட தர்கா

    கொரோனா எதிரொலி: 463 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்பட்ட நாகூர் தர்கா 5ஆம் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்கா 463 ஆண்டுகளில் முதல் முறையாக மூடப்பட்டது.

    புதிய மாவட்டம்

    புதிய மாவட்டம்

    கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்த மயிலாடுதுறை புதிய மாவட்டம் 6ஆம் இடத்தில் உள்ளது. சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தை நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை என இரண்டு தனிமாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவானது இதனால் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பூம்புகாரில் பலி

    பூம்புகாரில் பலி

    பூம்புகாரில் ஒரே நாளில் 50 காகங்கள் 3 நாய்கள் உயிரிழப்பு 7ஆம் இடத்தில் உள்ளது. நாகை மாவட்டம் காவேரிபூம்பட்டணம் கிராமத்தில் 50 காகங்கள், 3 நாய்கள் ஒரே நாளில் உயிரிழந்தன. இது தொடர்பாக காவல்துறைக்கும், கால்நடைத்துறைக்கும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் அளித்த தகவலை அடுத்து, உயிரிழந்த காகங்களில் உடல்கள் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், இந்த உயிரிழப்புகள் காவேரிபூம்பட்டணம் கிராம மக்களை அச்சத்தில் உறைய வைத்தது.

    குள்ளமானவர்கள்

    குள்ளமானவர்கள்

    வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம் 8ஆம் இடத்தில் உள்ளது. நாகையில் நடந்த ஒரு கல்யாணம் அனைவரையும் அசரடித்தது வேளாங்கண்ணியை சேர்ந்தவர் ஏழுமலை.. கொளப்பாடு கிராமத்தை சேர்ந்த சுகன்யா.. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.. மணமக்கள் 2 பேருமே 3 அடி உயரம் உள்ளவர்கள். வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் எளிய முறையில் இந்த கல்யாணம் நடைபெற்றது.. 50க்கும் குறைவான உறவினர்கள் இந்த கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.. மாப்பிள்ளையும், பொண்ணும் மாஸ்க் அணிந்திருந்தனர்.. கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவருமே சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறே மணமக்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

    மக்கள் பீதி

    மக்கள் பீதி

    கெயில் பைப்.. 30 அடி உயரத்திற்கு வெளியேறிய காற்று 9ஆம் இடத்தில் உள்ளது. நாகை மாவட்டத்தில் நிறைய எரிவாயு குழாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. மேமாத்தூர் கிராமத்தில் கெயில் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை சில கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த கிராமத்தை சுற்றி குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்க வேண்டும். இதில் பாதி தூரம் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு குழாயில் இருந்து புகை வெளியானது. 30 அடி உயரத்திற்கு வெளியேறிய புகையால் மக்கள் பீதி அடைந்தனர்.

    வேளாங்கண்ணி கோவில்

    வேளாங்கண்ணி கோவில்

    பக்தர்களின்றி வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலயப் பெருவிழா..! 10 ஆம் இடத்தில் உள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமானது உலக பிரசித்தி பெற்றது.இங்கு 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள் . மரியே வாழ்க என்ற விண்ணை பிளக்கும் பக்தர்களின் முழக்கங்களுடன் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த வேளாங்கண்ணி திருவிழா கொரோனா தொற்று காரணமாக வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களின்றி நடைபெற்றது. இது தான் மக்களே 2020 ஆம் ஆண்டு நாகப்பட்டிணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் . நீங்களும் நாகப்பட்டிணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கமெண்ட் செய்யுங்கள்.

    English summary
    nagapattinam top 10 year end storys in 2020 : In Nagapattinam, a huge all-party rally against the federal government's citizenship law amendment is in the first place of top ten news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X