நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காதலித்தபோது நெருக்கமாக எடுத்த போட்டோ.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய காதலன்.. விஷம் குடித்த இளம் பெண்

திருமணத்தை நடத்திய கல்லூரி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

நாகை: காதலித்தபோது நெருக்கமாக எடுத்த போட்டோவை மாப்பிள்ளைக்கு அனுப்பிவிட்டார் காதலன். இதனால் நடக்க இருந்த கல்யாணமே நின்றுபோனதுடன், இளம்பெண் விஷத்தையும் குடித்துவிட்டார். இந்த சம்பவம் நாகையில் நடந்துள்ளது!

சீர்காழி அருகே உள்ள மணல் அகரத்தை சேர்ந்தவர் சிவஞானசம்பந்தம். இவருக்கு வயது 31. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் காலேஜில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே காலேஜில் படித்த ஒரு மாணவியும் மிக தீவிரமாக காதலித்து வந்தனர்.

Young girl attempts suicide near nagai

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, கடந்த மாதம் 30-ந்தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. காதலிக்கு விரைவில் கல்யாணம் நடக்க இருந்ததை கேள்விப்பட்ட சிவஞானசம்பந்தம் ஆத்திரம் அடைந்தார்.

அதனால் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து, பெண்ணை பற்றி தப்பு தப்பாக அவதூறு சொன்னார். காதலித்தபோது நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோவையும் மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார்.

இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர். இதில் மனமுடைந்து போன பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார். வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததை கண்ட குடும்பத்தினர், பதறியடித்து கொண்டு பெண்ணை குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பெண்ணின் தந்தை சிவஞானசம்பந்தத்தை சந்தித்து இதை பற்றி கேட்டதற்கு, "உன் மகளை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்தால் கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டி உள்ளார். இந்த கொலை மிரட்டல் குறித்து பெண்ணின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யவும், அதன்பேரில் சிவஞானசம்பந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
Young Woman marriage stopped and College Teacher arrested for threatening near Nagai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X