நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தையை தந்துவிட்டு எஸ்கேப்.. காதலன் வீட்டு முன்பு போராட்டத்தில் குதித்த காதலி.. ஊரே திரண்டு தர்ணா

இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலிசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

நாகை: இளம்பெண்ணுடன் நெருங்கி பழகினார்.. ஜாலியாக இருந்தார்.. ஒரு குழந்தையும் பிறந்தது.. இப்போது மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் பெண்ணை ஏமாற்றி தலைமறைவாகி விட்டார் காதலன்.. இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, காதலன் வீட்டு முன்பு ஒரு ஊரே திரண்டு வந்து தர்ணாவில் உட்கார்ந்துவிட்டது!
நாகை மாவட்டம், வீரபெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தீனா... இவர் ஒரு மாற்று திறனாளி.. அதேபகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞரை 3 வருடமாக காதலித்து வந்தார்.

நெருங்கி பழகியதில், போன வருடம் தீனா கர்ப்பம் ஆனார்.. விஷயம் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.. இந்த நிலைக்கு யார் காரணம் என்று கேட்டதில் ஐயப்பனுடன் காதல் விவகாரத்தை தீனா சொல்லி உள்ளார்.

 young woman protest against youth near nagai

அதனால், தீனாவின் பெற்றோர், ஐயப்பன் வீட்டுக்கு சென்று, மகளை கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளனர்.. ஆனால் ஐயப்பன் மறுக்கவும், அவர் மீது நாகை அனைத்து மகளிர் போலீசிலும், நாகை டிஎஸ்பி, நாகை எஸ்பி ஆபீசில் உள்ள அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இது சம்பந்தமாக கடந்த 10 மாசமாக நாகை அனைத்து மகளிர் போலீசாரும் விசாரித்தும், இரு தரப்பை அழைத்து பஞ்சாயத்து செய்தும் வந்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த சமயத்தில், தீனாவுக்கு பிரசவம் நடந்தது.. 18 நாட்கள் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் இருந்த தீனா, கைக்குழந்தையுடன் ஐயப்பன் வீட்டு வாசலில் போய் உட்கார்ந்து விட்டார்.

ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஐயப்பனும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. தீனாவுக்காக அந்த கிராம மக்களும் திரண்டு வந்து ஆதரவு தந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

"ஐயப்பனும், தீனாவும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.. தீனா ஒரு மாற்று திறனாளியும்கூட.. இதனால்தான் கல்யாணம் செய்ய மறுக்கிறார். ஐயப்பனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை அவர்கள் விடுத்தனர். ஒரு கிராமமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
young woman protest against youth near nagai and police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X