நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மப்பில் வந்து மாட்டிய திருடர்கள்.. மக்கள் ஒப்படைத்தும் அப்படியே விட்டு விட்டுச் சென்ற போலீஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மப்பில் வந்து மாட்டிய திருடர்களை விட்டுச்சென்ற போலீஸ்

    நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் மதுபோதையில் நடமாடிகொண்டு இருந்த இரண்டு பிக்பாக்கட் திருடர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி தொடுத்தனர்.

    ஆனால் போலீசாரிடம் அவர்களை பிடித்து கொடுத்தும் அவர்களை காவல்நிலையம் அழைத்துசெல்ல இயலாது. இருவரும் மதுபோதையில் இருப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்ததால் பொதுமக்கள் அவேசமடைந்தனர்.

    2 Thieves nabbed by public

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்க்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிர கணக்கான மக்கள் பேருந்தில் பயணம் செய்கின்றனர். இன்று கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி மது அருந்திய இரண்டு நபர்கள் வழிபறியில் ஈடுபட்டுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் இருவரையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து பேருந்து நிலையத்தில் அமரவைத்துள்ளனர்.

    இவர்கள் மீது 30,000 ரூபாய் திருடப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் குறித்து பயணி ஒருவர் வாக்குவாதத்தில் வழிபறியில் ஈடுபட்டவர்களுக்கு சாதமாக பேசியதால் பொது மக்கள் அவரையும் சரமாரியாக தாக்கினர். பொதுமக்களுக்கும் அந்த பயணிக்கும் சிறிதுநேரம் கைகலப்பு ஏற்பட வழிபறியில் ஈடுப்பட்டவரும் அவருக்கு சாதமாக பேசிய அந்த பயணியை குடிபோதையில் சரமாரியாக தாக்க தொடங்கினார்.

    2 Thieves nabbed by public

    மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கொலையே நடந்துவிடும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். நிலைமை கை மீறி போவதை தொடர்ந்தது வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் ஒருமணிநேரம் கழித்து தான் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்ததும் பொதுமக்கள் வழிபறியில் ஈடுபட்ட இருவரையும் காவலரிடம் ஒப்படைத்தனர்.

    ஆனால் சம்பவம் குறித்து முறையான விசாரணை ஏதும் நடத்தாமல் குடி போதையில் இருப்பதாக கூறி இருவரையும் காவலர் அனுப்பிவிட்டார். இதனால் மக்கள் ஆத்திரமடைந்தனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் வடசேரி பேருந்து நிலையத்தில் இது போல வழிபறியில் ஈடுப்படுபவர்களை முறையான விசாரணை இன்றி போலீசார் அனுப்பிவிடுவது பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் காவலர்களே திருடர்களை காவல்நிலையம் சென்று விசாரிக்காமல் அனுப்பிவிடுவதால் அவர்கள் மீண்டும் வறிபறியில் ஈடுபடுவார்கள் என குற்றம்சாட்டினர்.

    English summary
    Public caught two thieves and handed over to the police. But police let them go Scott free.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X