நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 கிலோ தங்க அங்கி கொள்ளை.. பதற வைத்த 24 பேர்.. அனைவரும் குற்றவாளிகள்.. கோர்ட் அதிரடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    8 கிலோ தங்க அங்கி கொள்ளை.. பதற வைத்த 24 பேர்..வீடியோ

    நாகர்கோவில்: தமிழகத்தின் 108 வைணவ தேசங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 1974 முதல் பத்து ஆண்டுகளாக மூலவர் பெருமாள் சிலை மேல் சாத்தப்பட்ட சுமார் எட்டு கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் 24 பேர் பெரும் குற்றவாளிகள் என நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில். இது சுமார் 1700 ஆண்டு பழமை வாய்ந்ததாகும்.

    24 convicted in thiruvattar temple golden blanket theft case

    இந்த கோவிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் காணப்படுவார். சிலை முழுவதும் சுமார் 12 கிலோ தங்க தகடுகள் போர்த்தப்பட்டிருந்தது. திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 1974 முதல் 1984 மேலும் ஆண்டில் பெருமாள் சிலை மேல் சாத்தப்பட்ட சுமார் எட்டு கிலோ தங்க அங்கி வெட்டி கொள்ளையடிக்கப்பட்டது.

    தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியாமல் இருக்க இரும்பு தகடுகள் வெட்டி பொருத்தப்பட்டு அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. இது தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 17-06-1992 ம் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இது தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். 27 ஆண்டுகளாக நடந்த வழக்கில் 151 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 286 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் ஒரு பெண் உட்பட 24 பேர் குற்றவாளிகள் என நாகர்கோவில் நீதி ம்னற்றதில் நீதிபதி கிறிஸ்டியான் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

    English summary
    Nagercoil court has been convicted 24 persons in the infamous Thiruvattar temple golden blanket theft case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X