நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

Recommended Video

    கன்னியாகுமரியில் 3 பேர் உயிரிழப்பு... சுகாதார துறை விளக்கம்

    கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

    3 were died today in Nagercoil who were admitted in quarantine centres

    இந்த நோய்க்கு மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டார். இந்த நிலையில் நாகர்கோவிலில் கொரோனா வார்டில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஏற்கெனவே பலியாகிவிட்டனர்.

    இதையடுத்து இன்று ஒரே நாளில் அதே மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். 3 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    திருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி திருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி

    ஏற்கனவே இதே வார்டில் 3 பேர் மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 பேரது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனரா என தெரியவரும். 24 மணி நேரத்தில் ரத்த மாதிரிகளின் முடிவுகள் வந்தால்தான் தெரியும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    English summary
    3 were died today in Nagercoil who were admitted in quarantine centres.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X