நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலியே பயிரை மேய்ந்தது.. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு-வீடியோ

    நாகர்கோவில்: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது தலைமறைவாக உள்ள பேராசிரியரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ளது ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி. இந்த கல்லூரியில் நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்த ரஞ்சன் என்பவர் வரலாற்றுத் துறை தலைவராக இருந்து வருகிறார்.

    A case against a professor of sexual harassment for college student

    இந்நிலையில் ரஞ்சன் தன்னை வகுப்பறையில் வைத்து பலமுறை பாலியல் தொல்லை செய்ததாகவும் மிரட்டுவதற்காகவும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார் இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார்.

    A case against a professor of sexual harassment for college student

    மேலும் தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த மாணவி குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதாவிடமும் புகார் மனுவாக அளித்துள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த அதிகாரிகள், ரஞ்சன் மீது வழக்கு பதிவு செய்ய நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்,

    A case against a professor of sexual harassment for college student

    இதனையடுத்து மகளிர் போலீசார் ரஞ்சன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தன்னைத் போலீசார் தேடுவதை அறிந்த ரஞ்சன் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் ரஞ்சனை தேடி வருகின்றனர்.

    English summary
    The police have been searching for a professor who has been in the forefront of a sexually harassed by a college student at Nagercoil in Kumari district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X